மகத்தான அதிபதியும் ராஜாவுமான, மெல்கிசேதேக்கு Melchisedec, The Great Prince and King 55-01-09M 1. காலை வணக்கம், நண்பர்களே. இந்த அழகான, குளிர்கால காலை வேளையில், இங்கே இருப்பது நிச்சய மாகவே மகிழ்ச்சியாய் இருக்கிறது. சூரியன் நன்றாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் இருதயம் சந்தோஷ மாய் இருக்கிறது. சங்கை. திரு. பீலர் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் இந்த கட்டிடத்தின் மேல் பொழிந்தருளப் படுவதையும், ஜனங்கள் களிகூர்ந்து கொண்டிருப்பதையும், பிள்ளைகள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறதையும் அவர் அங்கே ஒலிநாடாவில் பதிவு செய்து கொண்டிருந்த பொழுது நானும் அவருடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நாங்கள் உயிரோடு இருப்பதற்காகவும், இன்று இந்த ஆராதனைக்குள்ளாக கடந்து வந்திருக்கிற இந்த ஜனங்கள் மத்தியில் இருப்பதற்காகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். இப்பொழுது உங்கள் ஒவ்வொருவருக் காகவும் நாங்கள் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். 2. உதவிக்காரர்கள் பின்னால் இருக்கிறார்கள், யாராகிலும் உள்ளே வந்தால் இங்கே சில இருக்கைகள் இருக்கின்றன, இங்கே வந்து அவர்கள் அந்த மேடையின் பின்னால் அமரலாம். மேலும், மக்கள் சற்று தாமதமாக வந்தால், அங்கே இன்னொரு பக்கத்தில் அங்கே முன் பக்கத்திலும் ஒரு நீள இருக்கை இருக்கிறது. 3. மேலும், அடுத்த வாரம் வருடாந்திர சுற்றுப்பயணம், மற்றுமொரு உலக சுற்றுப்பயணம் நாங்கள் துவங்க இருக்கிறோம். அடுத்த 12 ஆம் தேதி ஆரம்பித்து அதாவது வருகின்ற புதன்கிழமை, சிக்காகோவிலுள்ள பிலதெல்பியா சபையிலும் மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள். அதன் பிறகு ஒருவேளை இந்த காலை, அங்கிருந்து பிப்ரவரி 3 ஆம் தேதி துவங்கி நாங்கள் டெக்சாஸில் உள்ள லப்போக்- ல் இருக்கிற காட்டன் பெüல் அரங்கத்தில், அதன் பிறகு அங்கிருந்து பீனிக்ஸ்க்கு செல்வோம். அதன் பிறகு லாஸ் ஏஞ்சலிஸுக்கும், கலிஃபோர்னியாவில் உள்ள சவுத் கேட்டுக்கும் இடையில் உள்ள ஸ்டாக் -எக்ஸிபிட் இடத்திற்கு செல்லுவோம். அதன் பிறகு, கர்த்தருக்குச் சித்தமானால் நாங்கள் அங்கிருந்து ஹோனோலூலு போக எத்தன மாயிருக்கிறோம். 4. இப்பொழுது, ஜெபிக்கிற எல்லா மக்களையுமே நான் நிச்சயமாகவே பாராட்டுகிறேன். அவர்கள் ஒவ்வொரு நாளும் எனக்காகவும், என் ஆரோக்கியத்திற்காகவும் கர்த்தரிடத்தில் ஒரு சிறு ஜெபத்தை ஏறெடுப்பார்கள் என்றால், நான், உங்களுக்குத் தெரியாது நித்தியத்தின் இந்த பக்கத்தில் நான் எந்த அளவுக்கு உங்களுடைய ஜெபத்தை சார்ந்திருக்கிறேன் என்பதை நான் இங்கிருந்து போய்விட்ட பிறகு நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 5. இந்த காலை வேளையிலே சகோதரன் டாமியின் செய்தியை கேட்பதற்கு நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருந்தேன், அவருடைய சாட்சியில் அவர் சொன்னார், எவ்விதமாக தேவன் எப்போதுமே உங்களை ஏற்றுக் கொள்ள சித்தமுடையவராய் தம்முடைய கைகளை அகல விரித்து உங்களிடம் நீட்டிக் கொண்டிருக்கிறார் என்று. நீங்கள் என்ன செய்திருந்தாலும் அது காரியமில்லை, அவர் மனந்திரும்பி தம்மிடத்தில் வருகிற ஆத்துமாக்களை ஏற்றுக் கொள்ளும்படியாக எப்போதுமே தன்னுடைய கைகளை அகல விரித்து காத்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் என்ன செய்திருந்தாலும், உங்களுடைய பாவம் எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவர் எப்பொழுதுமே உங்களை மன்னிக்க சித்தமாய் இருக்கிறார். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக! என் வாலிப சகோதரனே. 6. இப்பொழுது, கடந்த ஞாயிறு கூட்டத்தில் ஜெபம் ஏறெடுக்கப்பட்ட ஜனங்களின் விளை பயன்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நமக்கு ஒரு சிறு நேர் காணல் இருக்கிறது, தனிப்பட்ட முறையில் மக்களை அணுகுவதற்கு... 7. நான் உங்களுக்கு சொல்கிறேன், நீங்கள் பாருங்கள்! நண்பர்களே, இங்கே நாம் சுகம் அளிக்கும் கூட்டங்களை வைக்காததற்கான காரணம் நீங்கள் அதை புரிந்து கொள்வீர்கள். ஏனென்றால், ஜனங்களை நிற்க வைப்பதற்கு போதுமான அறைகள் இங்கே நமக்கு இல்லை. அது அவ்விதமாக தான் இருக்கிறது. இந்த கூடாரத்தில் சுகம் அளிக்கும் ஆராதனைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நான் இங்கே இருக்கிற எல்லா நேரத்திலும் நாங்கள் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறோம், இருந்தாலும் சுகம் அளிக்கும் ஆராதனையை பிரத்தியேகமாக நடத்த முடியவில்லை. 8. மேலும், அரங்கங்களை கண்டுபிடிப்பதும் இன்னும் அது போன்ற காரியங்களும் மிகவும் கடினமாக இருக்கிறது. ஆனால், உங்களில் அந்நியர்கள் அநேகர் தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் இங்கே கடந்து வருகிறீர்கள். ஆனால் இந்த ஊரில் அதிகமான பூரண சுவிசேஷ மக்கள் இல்லை அல்லது வேறு விதத்தில் எப்படியாவது அல்லது இந்த சுற்று வட்டாரத்தில் அப்படிப்பட்டவர்கள் இல்லை. ஆனால் இங்கே இருக்கிற மற்றவர்கள் எல்லாம் இந்த கூட்டங்களுக்கு உதவி செய்வதோ அல்லது ஒத்துழைப்பு கொடுப்பதோ இல்லை. இன்னும் சொல்லப் போனால் பூரண சுவிசேஷ மக்கள் யாருமே இல்லை, இந்த ஊரிலே அனேக வித்தியாசமான சபைகள் இருக்கின்றன ஆனால், நாங்கள் எந்த சபையின் சார்பாகவும் கூட்டங்களை நடத்த முயற்சிப்பதில்லை. தேவனுடைய ஒத்தாசையை கொண்டு மாத்திரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக எல்லோருக்கும் இலவசம், யார் வேண்டுமானாலும் வரலாம் என்கிற விதமாக கூட்டங்களை நடத்த முயற்சிக்கிறோம். 9. நான் அங்கே, ஒரே ஒரு காரியத்திற்காக கவனித்துக் கொண்டிருந்தேன், அது கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த அறையில் அங்கே ஒரு கருப்பின சகோதரன் அவன் சமீபத்தில் தான் இரட்சிக்கப்பட்டிருந்தான். ஒரு சில மாதங்களுக்கு முன்பாக மேலும், அவனுடைய பிரியமான மனைவியும் கூட. மேலும், அவள் ஒரு ஊன்றுகோலை பிடித்து நடக்கிறவளாய், ஊனமுற்றவளாய் இருந்தாள். அந்த மனிதனோ, மிகவும் பயங்கரமான விதத்தில் நொறுங்கிப் போனவனாய் இருந்தான். டீக்கன்கள் அலுவலகத்தில் ஒரு தனிப்பட்ட நேர்காணலில் அவனோடு கூட பேசிக் கொண்டிருந்த பொழுது, அங்கே ஒரு தனிப்பட்ட நேர்காணல் உண்டாயிருந்தது. அங்கே அவன் அழைக்கப்பட்ட பொழுது, அங்கே அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவ்விதமாக அநேக நேர்காணல்கள் நமக்கு உண்டாயிருக்கிறது. நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த பொழுது, ஆவியின் ஏவுதலுக்குள்ளானேன். 10. ஒரு பெண்மணி அப்பொழுது தான் அங்கே இருந்து புறப்பட்டு சென்றாள். அவள் கக்கத்தண்டங்களை வைத்துக் கொண்டிருந்தாள், அதையெல்லாம் விட்டுவிட்டு, அவை இல்லாமலே அவள் வெளியே நடந்து சென்றாள். 11. இப்பொழுது, இந்த மனிதன் மிகவும் திட்டவட்டமாக கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்துக் கொண்டிருந்தான். அவன் எதற்காக ஜெபிக்கப்பட்டானோ, அந்த மிகவும் பயங்கரமான முறிவுகள், நான் அவனிடத்தில் சொன்னேன். “இப்பொழுது அந்த முறிவுகள் இந்த நிமிடத்தில் இருந்தே அவைகள் பின்னோக்கி நகர ஆரம்பித்து அதன் ஸ்தானத்தில் போய் பொருந்தும்” என்று நான் சொன்னேன். நான் சொன்னேன், “இப்பொழுது அது அவ்விதமாக பின்னோக்கி அதன் ஸ்தானத்திற்கு நகர்கிறதை நீ பார்க்கும் பொழுது, அது அப்படியே பின்னுக்கு நகர்வதை நீ பார்க்கும் பொழுது, அது உனக்கு இன்னும் அதிக விசுவாசத்தை கொடுக்கும்” என்றேன். 12. பாருங்கள், விசுவாசமானது எதையாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், வெறுமனே ஒரு கற்பனையான எண்ணமாக இருக்க முடியாது. அது நிற்கும் படியாக அடிப்படையில் அதற்கு ஒரு பிடிமானம் இருக்க வேண்டும்; விசுவாசம் அதை பெற்றுள்ளது. மேலும் இந்த காரணத்தினால் தான், தேவனுடைய வார்த்தையானது தெய்வீக சுகத்தையும் ஆத்தும விடுதலையையும் சரீர விடுதலையையும் குறித்து நமக்கு கற்பிக்கிறது என்று நாம் விசுவாசிக்கிறோம், மேலும் நாம் அதை தேவனுடைய நித்திய வார்த்தை என்னும் அஸ்திபாரத்தின் மேல் நிலை நிறுத்துகிறோம். 13. மேலும், நான் அந்த சகோதரனிடத்தில், “இப்பொழுது நான் உனக்கு சத்தியத்தை சொன்னேன் என்று நீ அறிந்து கொள்ளும் படியாக, (ஏனென்றால் அவனை நேரில் காண்பதற்கு முன்பாகவே நான் அதைக் குறித்து தரிசனம் கண்டேன்) நீ வீட்டுக்குப் போய் ஒரு நூலை எடுத்து உன்னுடைய எலும்பு முறிவின் மேலாக அதை இறுக்கமாக கட்டி அதை அளவிடு” என்றேன். அதன் பிறகு அந்த நூலை அறுத்துவிடு, அதற்குப் பிறகு அடுத்த ஞாயிறு வரைக்கும் இனி அதை தொடாதே, அதன் பிறகு மீண்டுமாக என்னிடத்தில் வருவதற்கு முன்பாக வேறொரு நூலை எடுத்து அந்த எலும்பு முறிந்த இடத்தில் சுற்றிலும் மறுபடியும் இறுக்கமாகக் கட்டி அதை அளந்து, அதன் பிறகு அந்த நூலையும் அறுத்து அந்த இரண்டு நூலிலும் இருக்கிற அந்த எலும்பு முறிவின் சுருக்கத்தின் வித்தியாசத்தைக் காணும்படியாக அந்த இரண்டு நூல்களையும் என்னிடத்தில் எடுத்துக் கொண்டு வா” என்று சொன்னேன். அதற்கு அவன், “நான் அப்படியே செய்வேன்” என்று சொன்னான். 14. நல்லது, இங்கே இருக்கிறது அந்த நூல், சுமார் ஒன்றரை அங்குலம் அளவிற்கு அதுபோன்று அந்த வித்தியாசம் இருக்கிறது. ஆகவே, என்ன நடந்தது என்று நீங்கள் காணும்படியாக அந்த மனிதனும் கூட இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். 15 இப்பொழுது, ஏதோ ஒன்று சம்பவித்தது. தேவன் எப்பொழுதாயினும் ஒரு காரியத்தை சொல்லி, அல்லது ஒரு தரிசனத்தின் மூலமாகவோ அல்லது ஒரு வெளிப்பாட்டின் மூலமாகவோ என்ன சம்பவிக்கப் போகிறது என்று சொல்லி, அது சொல்லப்பட்ட வண்ணமாகவே அப்படியே சரியாக அது சம்பவிக்காமல் இருந்ததை, பாருங்கள்! அப்படியே சரியாக, சம்பவிக்காமல் இருந்ததை என் வாழ்நாளில் ஒரு முறை கூட நான் கண்டதே இல்லை. 16. அவனுடைய மனைவி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஊன்றுகோல் உதவியுடன், கக்கத்தண்டம் அல்லது ஒரு தடி, கொம்பு அதனோடு உள்ளே நடந்து வந்தாள். ஆனால், இன்றைக்கு நான் அவளை கவனித்தேன், அவள் அங்கே உள்ளே இருக்கிறாள். அவள் நடக்கவே முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். கர்த்தர் அவளை சொஸ்தமாக்குவார் என்று நான் அவளிடம் சொன்னேன், அவள் ஒரு செயலற்றுப் போன காலை உடையவளாய் இருந்தாள். ஆனால், அவள் மேலே நடந்து வருகிறதை நான் பார்த்தேன். அவள் அந்த கொம்பை எடுத்து தன்னுடைய தோளின் மேல் வைத்துக் கொண்டு அங்கே உள்ளே நடந்து வந்தாள். மேலும், இன்றைக்கு அவள் இங்கே இருக்கிறாள். 17. [ஒரு சகோதரி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் தான் அந்த பெண்மணி” என்று சொல்கிறாள் - ஆசி.] அங்கே இன்னொரு பெண்மணி அவர்களில் இன்னொருத்தி அங்கே கீழே இருந்து கொண்டு அது யாராயிருந்தது? அவள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தாள், ஏராளமான வியாதிகளுடன், கடந்த ஞாயிற்றுக் கிழமை மேலும் ஊனமுற்றவளாகவும், அவள் அங்கு எங்கோ ஜார்ஜ் டவுன் அருகே இருக்கிறாள் இல்லையா, பெண்மணி. அல்லது அந்த பக்கத்தில் வேறு எங்கோ? [“ஜார்ஜ் டவுன், இந்தியானா.”] இந்தியானாவில் உள்ள ஜார்ஜ் டவுனில். அவள் சொன்னாள், “ஆனால், சகோதரன் பிரன்ஹாமே நான் வயதானவளாய் இருக்கிறேனே” என்று. 18. நான் சொன்னேன், “ஆனால், ஆபிரகாமும் கூட நடக்கக் கூடாத ஒரு காரியத்தை விசுவாசிக்கும்படியாக கேட்டுக் கொள்ளப்பட்ட போது உன்னை காட்டிலும் அதிக அளவுக்கு வயதானவனாக இருந்தான்” என்று. அப்பொழுது அவள் அதை ஒத்துக்கொண்டாள். ஆகவே, இதோ அவள் இங்கே இருக்கிறாள். 19. இப்பொழுது நான் பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு பின்னால் இன்னொரு பெண் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், சரியாக இங்கே அவளுடைய கணவனுக்குப் பின்னால். அந்த கருப்பின பெண்மணி, சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்; அன்றொரு நாள் பின்னால் அங்கே உட்கார்ந்திருந்தாள். 20. அந்த நூல்கள் சான்றாக இருக்கின்றன. கக்கத் தண்டங்கள் போய்விட்டன, அதுவும் சான்றாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார், மேலும் ஆளுகை செய்கிறார். ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்பதற்கும், இந்த நாளில் அவர் நம்மோடு இருக்கிறார் என்பதற்கும் உன்னதமான சான்றுகள் உள்ளன. அவர் இன்னும் ஜீவிக்கிறார் என்பதற்காக நாம் எவ்வளவாக நம்முடைய இருதயத்தின் ஆழங்களில் இருந்து அவருக்கு நன்றி செலுத்துகிறோம்! அவர் மரிக்கவில்லை. அவர் மரித்தோரி லிருந்து உயிர்த்தெழுந்தார், மேலும், சாவுக்கேதுவானவர்களாகிய நம் மத்தியில் இன்றைக்கு நாம் செய்யக் கூடியதையும், நினைக்கக் கூடியதை காட்டிலும் எல்லா வற்றிற்கும் மேலாக அபரிமிதமான காரியங்களை செய்யக் கூடியவராகவும், சித்தமுடையவராகவும் இருக்கிறார். அவர் நமக்கு செய்த அவருடைய உத்தமமான நன்மைகளுக்காக நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் அவரை ஸ்தோத்தரிக்கிறோம். 21. இப்பொழுது, அங்கே ஏதாவது இன்னும் சில நீள இருக்கைகள் இருக்கின்றனவா? [சகோதரன் நெவில் “இங்கே சில நீள இருக்கைகள் இருக்கின்றன” என்று சொல்கிறார்.] நல்லது. அவர்களிடம் இன்னும் சில இருக்கின்றன, நீங்கள் சொன்னால் நாங்கள் அவைகளை கொண்டு வந்து அந்த மேடையின் மேல் போட்டு அவர்களை அதன் மீது அமர வைக்க முடியும். 22. இப்பொழுது, ஒரு ஞாயிறு பள்ளி பாடத்திற்காக, நாம் ... ஒரு சிறு ஞாயிறு பள்ளி பாடத்துக்காக போதிப்பது, அது என் மேல் விழுந்த கடமையாக இருக்கிறது. தேவனுக்கு சித்தமானால் சில நாட்களுக்கு முன்பாக நாம் இங்கே இந்த சபையில் சில ஞாயிறுகளுக்கு முன்பாக ஆரம்பித்த ஒரு பொருளை அதை முடிப்பதற்கு நாம் முயற்சி செய்யப் போகிறோம். 23. மேலும் இப்பொழுது, சகோதரன் ஜøனியர், ஒரு வேளை அவர்கள் அவரை இங்கே அழைத்து வந்திருக்கலாம்! ஒருவேளை அவர் இந்த மேடையின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாரா என்று நான் வியக் கிறேன். மேலும், சில ஸ்திரீகளையும் அவர்கள் அனுமதித் திருக்கின்றனர்... நீங்கள் முன் இருக்கையில் உட்கார்ந்து இருந்தால் அது உங்களுக்கு எவ்வளவு நலமாக இருக்குமோ அதை காட்டிலும் மேலாக இருக்கும்படியாக அவர்களை இங்கே மேடையின் பின்னால் ஒரு வேளை கொண்டு வந்தால் நலமாய் இருக்கும். மேலும், ஞாயிறு பள்ளி வகுப்புகள் முடிந்த உடனே அந்த அறையில் அங்கே இன்னும் சில இருக்கைகள், கூடுதலான இருக்கை கள் ஆயத்தமாக இருக்கும். 24. இப்பொழுது ஒரு வேளை யாராகிலும், இங்கே இந்த சபையோடு தங்களை இணைத்துக் கொண்ட யாராகிலும் இருப்பீர்களானால் அவர்கள் வந்து இங்கே மேலே உட்கார்ந்து கொண்டால் அப்பொழுது இனி வரப் போகிற யாருக்காவது அந்த இருக்கைகளை கொடுக்க முடியும். ஏனென்றால், இந்த சபையை சேராத அந்நியர் களுக்கு இங்கு மேலே வந்து உட்காருவது சற்று சங்கடமாக இருக்கும். 25. இப்பொழுது இன்றைக்கு நாம் தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையை தியானித்துக் கொண்டி ருக்கிறோம். கடந்த செய்தி உங்களுக்கு ஞாபகம் இருக் கிறதா? அது எபிரேயர் புஸ்தகத்திலிருந்து கொடுக்கப் பட்டது. 26. தேவனுடைய வார்த்தையை தியானிப்பது மிகவும் அற்புதமானது, அது நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிறது. “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவை களே” என்று இயேசு சொன்னார். மேலும், ஜீவிக்கிற வார்த் தையை நமக்கு தந்தருளும்படி, அவர் நம்மை ஆசீர்வதித் திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு அருமையானதாக இருக்கிறது. தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார். 27. இப்பொழுது, நீங்கள் எல்லாரும் உங்கள் வேதாக மத்தில் எபிரேயர் 7ஆம் அதிகாரத்துக்கு திருப்புங்கள். 28. இப்பொழுது இந்த காலை வேளையில் நாம் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ள முயற்சிக்கப் போவதில்லை. ஆனால், வார்த்தையைக் கொண்டு கிறிஸ்துவை சற்றே உயர்த்துவது, அதாவது தேவனுடைய வார்த்தையை கொண்டு பேசுவதன் மூலம் அவர் என்னவாக இருக்கிறார் என்றும், நாம் எல்லோரும் எதற்காக இன்று இங்கே இருக்கிறோம் என்றும், கிறிஸ்தவ மார்க்கம் எதற்கு தேவை என்றும், கிறிஸ்தவ மார்க்கம் என்ன என்றும் பார்க்கப் போகிறோம். மேலும், “விசுவாசம் கேள்வினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத் தினாலே வரும்.” அந்த வார்த்தை. 29. இப்பொழுது, நம்மால் இந்த வேத புத்தகத்தை எடுத்து அதன் பக்கங்களை இவ்விதமாக புரட்ட முடிகிறது. ஆனால், வார்த்தையை திறந்து கொடுக்கக்கூடிய ஒரே ஒருவர்தான் உண்டு அவர்தான் கிறிஸ்து. ஏனென்றால், அவர்கள் (யோவான்) அவரை தரிசனத்தில் கண்டபோது, அவரை உலகத்தோற்றத்துக்கு முன்பாக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக கண்டார்கள். மேலும், பரலோகத்தில் அந்த புத்தகத்தை திறக்கப் பாத்திரவானாகவும், அதன் முத்திரைகளை உடைக்க கூடியவராகவும் ஒருவரும் காணப் படவில்லை. ஆகவே, அவன் உலகத்தோற்றுக்கு முன்னதாக அடிக்கப்பட்டது போன்ற ஒரு ஆட்டுக்குட்டியை அங்கே கண்டான். சிங்காசனத்தில் வீற்றிருந்தவருடைய வலது கரத்தில் இருந்து அந்த புத்தகத்தை வாங்கி, அந்த புத்தகத்தை திறந்து, முத்திரைகளை உடைத்தார். 30. இப்பொழுது, அவர்தான் அந்த புத்தகத்தின் ஆக்கியோன். ஆகவே, அந்த புத்தகத்தை திறப்பதற்கு முன்பாக ஒரு நிமிடம் அவரிடத்தில் நாம் பேசுவோமா? 31. இரக்கமுள்ள எங்கள் பரலோக பிதாவே! மகத்தான, ஆழமான, அன்பு நிறைந்த இருதயத்தோடு உம்முடைய மகிமையான நாமத்திற்கு எங்களுடைய துதி பலிகளையும் நன்றிகளையும் ஏறெடுக்கும்படியாக இன்று நாங்கள் வந்திருக்கிறோம். எங்களை குறித்து மிகவும் அக்கறை உடையவராய் இருக்கிற காரணத்தினால், நாங்கள் இன்னும் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து எங்களுக்காக எங்கள் ஸ்தானத்தில் மரித்தார். பாவம் அறியாத நீர் பாவிகளாகிய எங்களுக்காக மரித்தீர். எங்கள் பாவங்களை எல்லாம் தம் மேல் சுமந்து கொண்டு தேவனை திருப்திப் படுத்தத் தக்கதாக அந்த விலையேறப்பெற்ற கிரயத்தை செலுத்தி, எங்கள் பாவங்களை தூரமாக கொண்டு சென்றீர். மேலும், எங்களை நீதிமானாக்கும் படியாக மீண்டும் உயிரோடு எழுந்தீர். இப்பொழுதோ, அவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருந்து எங்களுடைய பாவ அறிக்கையின் பேரில் பரிந்து பேசுகிறவராக என்றென்றைக்குமாய் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர். ஓ நாங்கள் பெற்றிருக்கிற இந்த திடமான நம்பிக்கைக்காக நாங்கள் எவ்வளவாய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்களை சுற்றிலும் இருக்கிற எல்லாமும், சாவுக்கேதுவான இந்த ஜீவியமும் கூட தோற்றுக் கொண் டிருக்கும் வேளையில், எங்களது இருதயங்களோ அந்த மகிமையான நம்பிக்கையாகிய நித்திய ஜீவன்மேல் பொருத்தப்பட்டிருக்கிறது. 32. இங்கிருக்கிற அனேகர் இந்த காலை வேளையிலே பிதாவே தங்கள் ஆவியிலும், தங்கள் ஆத்துமாவிலும் தேவை உடையவர்களாய் இருக்கிறார்கள். இரட்சிக்கப்படாத வர்களை நீர் இரட்சிக்க வேண்டுமாய் நாங்கள் ஜெபிக் கிறோம். கர்த்தாவே, இதை அருளும். உம்மிடத்தில் வேறுபட்டு காணப்படுகிறவர்கள் உம்மிடத்தில் நெருங்கி நடக்க கிருபை செய்யும். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று கர்த்தர் தாமே பேசிச் சொன்ன அந்த வார்த்தைகள் நிறைவேறத் தக்கதாக வியாதியஸ்தர்கள் எல்லாரையும் நீர் சுகமாக்க வேண்டுமாய் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். மேலும், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் நீர் சொல்லி இருக்கிறீர். “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்; வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பீர்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று. 33. மேலும், இங்கே இருக்கிற இந்த சிறு கட்டிடத்தில் பார்க்கும் பொழுது, சில நாட்களுக்கு முன்பாக கக்கத் தண்டங்களோடு நடந்த அனேக மக்கள் இன்றைக்கு அவை இல்லாமல் சாதாரணமாக நடக்கிறார்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தாங்கிப் பிடிக்கும் நித்திய கரங்களால் தூக்கி விடப்பட்டு தாங்கி நடத்தப்பட்டு நடந்து கொண்டி ருக்கிறார்கள்! புற்றுநோயினால் மரித்துக்கொண்டிருந்த அநேகர் இப்பொழுது இங்கே நன்றாக இருக்கிறார்கள். உம்முடைய ஊழியக்காரர்கள், மருத்துவர்கள் அது போய்விட்டது என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இனி அவர்களால் அதை கண்டுபிடிக்க முடியாது. இந்த காரியங்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 34. எங்கள் குறைவுகளுக்காக எங்களை மன்னியும், மேலும், எங்கள் இருதயங்களை அன்பினால் நிரப்பும். உம்முடைய வார்த்தையின் மூலம் இப்பொழுது எங்களோடு பேசும். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 35. இந்த காலை வேளையிலே நம்முடைய வேத வசன வாசிப்பின் உணர்வை பெற்றுக் கொள்வதற்காக ஒரு சிறிய முன்னோட்டத்தை காண்போம். அது என்ன வென்றால், நமக்குள் இருக்கிற நம்பிக்கையின் உறுதிப்பாட்டை குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அது அந்த எபிரேய எழுத்துக்களில் மிக அழகாக கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாட்களில் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலரோடு தேவன் எப்படி இடைபட்டார் என்பதை நாம் வாசித்த பிறகு அந்த வாக்குத்தத்தமானது நமக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்று நாம் பார்க்கிறோம். மேலும், அந்நாட்களிலே நடந்த காரியங்களெல்லாம் தேவன் இன்றைக்கு நமக்காக என்ன செய்து கொண்டிருக் கிறார் என்பதற்கு உதாரணமாக இருந்தது என்று நாம் பார்க்கும் பொழுது, அது அவரை விசுவாசிக்கிற பிள்ளை களாகிய நமக்கு மிகப்பெரிய ஒரு உறுதியை கொடுக்கிறது. 36. இப்பொழுது எபிரேயர் 6 ஆம் அதிகாரத்தின், முந்தின ஞாயிற்றுக்கிழமையின் பாடத்தின் பேரிலான ஒரு சிறிய முன்னோட்டத்தை காண்போம். நாம் இங்கே 12 அல்லது 13 வது வசனத்தில் இருந்து துவங்குவோம். ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணின போது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாத படியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: 37. தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதை காணும்படியாகவும், அவர் எப்படியாக ஆபிரகாமுக்கு அந்த உடன்படிக்கையை கொடுப்பதாகவும், அவனுக்கும் அவனுக்கு பின்வரும் சந்ததிக்கும் என்றென்றைக்குமாக அதை கொடுப்பதாகவும் அவர் வாக்குத்தத்தம் செய்தார் என்பதை பார்க்கும் படியாகவும், நாம் எப்படியாக அதை உள்வாங்கிக் கொண்டோம் என்பதை, இந்த வகுப்பு நினைவுகூறும் என்பதை குறித்து நான் நிச்சயமுடைய வனாய் இருக்கிறேன். 38. ஆகவே, தேவன் ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார். மேலும், யாராகிலும் ஆணையிடும் பொழுது தங்களிலும் பெரியவர் பேரில் ஆணையிடு வார்கள். ஆகவே, தேவன் ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவரும் இல்லாதபடியினால் தம்மைக் கொண்டே அவர் ஆணையிட்டார். அப்படி என்றால் கர்த்தருடைய பரிசுத்தவான்களே உங்களுக்கு ஒரு அஸ்தி பாரம் என்பது எவ்வளவு உறுதியாய் இருக்கிறது! 39. நாம் இன்று இந்த பொருளை உண்மையான அர்த்தத்தோடும், அமைதியோடும் அணுகுவோமென்றால் நாம் ஒருபோதும் உணர்ச்சிவசப்பட மாட்டோம். விசுவாசம் ஒருபோதும் உணர்ச்சி வசப்படுவதில்லை. விசுவாசம் ஒருபோதும் அவசரப்படுவதில்லை. விசுவாசம் அது எதைக் குறித்து பேசுகிறது என்று அறிந்திருக்கிறது. 40. நம்முடைய போதகர் எதை குறித்தாவது உணர்ச்சி வசப்பட்டதை நீங்கள் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டீர்கள். அவர் மலையின் மேல் உட்கார்ந்து கொண்டு எருசலேமை நோக்கிப் பார்த்த பொழுது எப்படி நிதானமாக இருந்தாரோ அதேபோலத்தான் ஒரு மரித்த மனிதனுடைய கல்லறை அருகிலே நின்ற போதும் அவர் நிதானமாக நின்று கொண்டிருந்தார். 41. கொந்தளிக்கும் கடல் நடுவே இருந்த ஒரு படகில் எல்லா தொல்லைகளுக்குள்ளாகவும் இருந்து, அலைகள் படகின் மேல் பலமாக மோதி அடித்துக்கொண்டிருந்த போதும், அவரோ தேவனுக்குள் முழுவதுமாக இளைப் பாறிக்கொண்டிருந்தார். அந்த கடல் அலைகளின் முழக்கங் கள் கூட அவருடைய கவனத்தை ஈர்க்கவோ, அவரை உறக்கத்திலிருந்து எழுப்பவோ முடியாத அளவுக்கு அவர் அவ்வளவு நிதானமாக இருந்தார். விசுவாசம் எப்பொழுதுமே கலங்காததாய் இருக்கிறது. 42. இப்பொழுது, நாம் கலங்காமல் இருக்கக்கூடிய காரணம் என்ன என்பதை நாம் இங்கே காண்கிறோம். ஏனென்றால், அது நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமிற் கும் அவருடைய பிள்ளைகளுக்கும் கொடுக்கப்பட்டது. மேலும், வாக்குத்தத்தத்தை கொடுத்த தேவன் அதை உறுதிப்படுத்துவதாகவும் காத்துக் கொள்வதாகவும் ஆணையிட்டுமிருக்கிறார். அவர் அதை செய்தும் இருக்கிறார். 43. மேலும், ஆபிரகாமுடைய பிள்ளைகள் என்று சொல்லும் பொழுது, அது அவனுடைய வம்சவழியில் வந்த கோத்திரமாகிய யூத கோத்திரத்தை மாத்திரம் குறிக்க வில்லை. ஆனால், ஆபிரகாம் மூலமாக ஈசாக்கும், ஈசாக்கின் மூலமாக கிறிஸ்துவும் வந்தனர். கிறிஸ்துவின் மூலமாக இந்த உலகம் ஆசீர்வதிக்கப்பட்டது. ஏனென்றால், ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் என்று சொல்லப்பட்டது, அதுதான் கிறிஸ்து. மேலும் அதன் மூலமாகவே, பூமியில் உள்ள எல்லா குடிகளும் இந்த உடன்படிக்கைக்குள்ளாக கூட்டிச் சேர்க்கப்பட வேண்டி இருந்தது. 44. மேலும், ஆபிரகாமுக்கு அந்த உடன்படிக்கை யானது நிபந்தனை இன்றி கொடுக்கப்பட்டது. “ஆபிரகாமே, நீ இதை செய்தால், அப்பொழுது நான் இதை செய்வேன்” என்றல்ல. ஆனால், “நான் அதை ஏற்கனவே செய்து விட்டேன்” பாருங்கள்? 45. அது நாம் என்ன செய்கிறோம் என்பதல்ல; அது அவர் நமக்காக என்ன செய்தார் என்பதாக இருக்கிறது. எந்த ஒன்றிற்கும் பாத்திரராக ஆவதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது. மகத்தான யேகோவா தேவனுக்கு முன்பாக, மகத்தான அவருடைய உயரிய பரிசுத்தத்திற்கு முன்பாக, ஏதோ ஒன்றை சுதந்தரித்துக் கொள்வதற்கு ஏதுவாக ஏதாவதொன்றை செய்வதற்கு அநீதியுள்ளவர் களாகிய நாம் எம்மாத்திரம்? பாருங்கள்? ஆனால், நாம் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று என்னவென்றால், அவர் நமக்காக ஏற்கனவே என்ன செய்து முடித்து விட்டாரோ அதை ஏற்றுக் கொண்டு அதற்கு நன்றி உள்ளவர்களாய் ஜீவிப்பது மாத்திரமே. அது எவ்வளவு சுலபமாக இருக் கிறது, இல்லையா? 46. ஒரு காரியத்தை நான் மிக நிச்சயமாக அறிந்திருக் கிறேன் அதாவது, அனேக சமயங்களில் ஜனங்களுடைய சிந்தையில், அவர்கள் தெய்வீக சுகம் அளித்தலை நடப்பிக்க முயற்சிக்கும்போது அல்லது அதுபோன்ற நேரங்களில் “என்னால் மாத்திரம் அதை செய்ய முடிந்தால்” என்பதாக அவர்கள் செயல்படுகின்றனர். அதைக் குறித்து எதிர்மறையாக எனக்கு எதுவுமில்லை என்று சொல்லு கிறார்கள். 47. அதே சமயத்தில், ஒருவேளை இயேசு கிறிஸ்து இப்படி சொல்லி இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று... இப்பொழுது நான் என்னுடைய விசுவாசத்தை சற்றே சோதித்துப் பார்க்கட்டும், “இதை செய்ய போதுமான விசுவாசம் என்னிடத்தில் இருக்கிறதா என்று நான் பார்க்கட்டும்” என்று. பாருங்கள், “ஒரு வேளை அதை செய்வதற்கு போதுமான விசுவாசம் எனக்கு இருக்கிறதா இல்லையா என்று பார்க்க நான் ஒரு உபவாசம் போடட்டும்” என்று சொல்லி இருந்தால் எப்படி இருந் திருக்கும்? அவரோ அவருக்கு இருந்த விசுவாசத்தைக் குறித்து முற்றிலும் கவலையற்றவராய் இருந்தார். அவர் அப்படியே அதை பேசி அது அப்படியே சம்பவிக்கும் என்று அவர் அறிந்திருந்தார். 48. அது நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து இங்கே வந்திருப்பதை போன்று இருக்கிறது. நீங்கள் வீட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருந்து உங்கள் மனைவியிடத்தில் அல்லது உங்களுக்கு அன்பானவர் களிடத்தில் நான் அங்கே போய்விட்டு சற்று நேரம் கழித்து பிற்பகலில் திரும்பி வருவேன் என்று சொல்லி இருப்பீர்கள். ஆனால், நீங்கள் திரும்பிப் போவீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் வீட்டிற்கு திரும்பிப் போவேன் என்று சொல்வதற்கு போதுமான விசுவாசம் எனக்கு இருக்கிறதா என்று நான் ஆச்சரியப்படுகிறேன் என்று ஒரு போதும் நீங்கள் சொல்லியிருக்க மாட்டீர்கள். என்னுடைய காரை ஓட்டிச் செல்வதற்கு எனக்கு போதுமான விசுவாசம் இருக்கிறதா என்று நான் யோசிக்கிறேன் என்று நீங்கள் சொல்லியிருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களை அறியா மலேயே உங்கள் காரின் சாவியை எடுத்து அந்த காரை இயக்கி ஓட்டிக் கொண்டு வந்து வீட்டிற்கு திரும்பிப் போகிறீர்கள். பாருங்கள்! அது உங்களை அறியாமலேயே நீங்கள் செயல்படுத்துகிற உங்கள் விசுவாசமாய் இருக்கிறது. 49. கிறிஸ்துவுக்குள்ளும் அது அதே விதமாகத்தான் இருக்கிறது. நாம் அப்படியே நம்மை அறியாமலேயே அது அவருடைய வார்த்தை என்று சொல்லுகிறோம். அது அதை அப்படியே முடித்து வைத்து விடுகிறது. அதற்கு, மேலும் அங்கே ஒன்றும் தேவைப்படுவதில்லை. அப்படியே போய்க் கொண்டிருங்கள். அப்படித்தான் அவர்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுது “தம்மிலும் பெரியவர் இல்லாதபடியினால், தமது பேரிலே தாமே ஆணையிட்டார். ” 50. நல்லது இப்பொழுது, நாம் வேகமாக கடந்து சென்று அதை பார்ப்போம். ஏனென்றால், இன்றைக்கு நம்முடைய பொருளானது மெல்கிசேதேக்கு: மகத்தான அதிபதியும் ராஜாவுமாகிய, மெல்கிசேதேக்கு என்பதாக இருக்கிறது. 51. இப்பொழுது, 14வது வசனம் சொல்லுகிறது, நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 52. ஏனென்றால், அவன் எல்லா தேசத்துக்குள்ளும் பலுகி பெருக வேண்டியவனாய் இருந்தான். அந்த சுவிசேஷம் கிறிஸ்துவின் மூலமாக... இப்பொழுது, அது நியாயப்பிரமாண காலங்களின் கீழாக செய்யப்பட்டிருக்க முடியாது. ஏனென்றால் உலக முழுவதும் அது சென்றடைய வில்லை, மாறாக வெறுமனே விருத்த சேதனம் செய்யப் பட்ட யூதர்களுக்கு மாத்திரமே சென்றடைந்தது. ஆனால் பரிசுத்த ஆவியின் ஆளுகையில் அவர் எல்லா இருதயங் களையும் விருத்தசேதனம் செய்திருக்கிறார், பாருங்கள், அனைத்து தேசங்களும்; ஆபிரகாமின் சந்ததி அனைத்து தேசங்களுக்கும் பலுகிப் பெருகும். அந்தப்படியே, அவன் பொறுமையாய் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப் பட்டதை பெற்றான். 53. நாம் எப்படி அதன் பேரில் இடைபட்டோம், எப்படி, “ஆபிரகாம், பொறுமையோடு காத்திருந்தான்.” காத்திருத்தல் என்பது பார்த்தல் (என்ன?) காணக்கூடாத தேவன் தனக்கு முன்பாக காணக் கூடியவராக நிற்பதை போல விசுவாசித்தல். மேலும், “அவனுடைய பொறுமைக்கு பிறகு, அவன் அந்த கடினமான யுத்தத்தை பொறுமை யோடு செய்து முடித்த பிறகு, அவன் அந்த வாக்குத் தத்தத்தை சுதந்தரித்தான்.” 54. இப்பொழுது அது விந்தையாக இல்லையா? தேவன் அப்படியே இறங்கி வந்து, அங்கேயே அவனுக்கு வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்க முடியும், மேலும், அங்கேயே அதை நிறைவேற்றியும் இருக்க முடியும் என்பது போல தென்படுகிறது. அவரால் அதை செய்திருக்க முடியும். 55. அன்னாள், அவள் தேவாலயத்தில் இருந்த பொழுது, அவள் அப்பொழுது ஜெபித்துக் கொண்டிருந் தாள். அப்பொழுது ஏலி அங்கே வந்து அவள் வெறித் திருக்கிறவளாக அவன் நினைத்தான். ஆனால், அவளோ, “நான் குடித்திருக்கவில்லை ஆனால், தேவன் என் நிந்தையை எடுத்துப் போட வேண்டும் என்று அவரிடத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொன்னாள். அவன் சொன்னான், “கர்த்தராகிய தேவன் உன்னுடைய மன்றாட்டை உனக்குத் தந்தருள்வாராக” என்று. 56. இப்பொழுது, தேவனால் அந்த சிறிய சாமுவேலை நேரடியாக அன்னாளுடைய கைகளில் வைத்திருக்க முடியும். நம் எல்லோருக்குமே அது தெரியும். அவர் எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிறவர். அவர் அதை உரைத்து காரியங்களை அப்படியே இருக்கிறவைகளாக செய்கிறவர். அவர் அந்த குழந்தையை அப்படியே அன்னாளின் கைகளில் வைத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்ய வில்லை, ஏனென்றால், ஒரு சிறு குழந்தை வருவதற்கு ஒன்பது மாதங்கள் என்பது வழக்கமான காரியமாய் இருக்கிறது. அவர் அவளுக்கு அந்த வாக்குத்தத்தத்தை கொடுக்க மாத்திரம் செய்தார், அவளோ அந்த வாக்குத் தத்தத்தை சுதந்தரித்துக் கொண்டாள். 57. மோசே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும்படியாக அவன் புறப்பட்டபோது, தேவன் மோசே யிடத்தில் “இந்த எல்லா வாக்குத்தத்தங்களையும் அநேக வருடங்களுக்கு முன்பாகவே நான் ஆபிரகாமுக்கு கொடுத்தேன்” என்று சொன்னார். அதெல்லாம் இப்பொழுது அரண் சூழ்ந்ததாயும் அந்த தேசத்துக்குள்ளாக அந்த நெடிய ஆட்களாகிய பெலிஸ்தியர்களும், அங்கு இருந்த அந்த மக்கள் யாவரும் யுத்த வீரர்களுமாய் இருந்தார்கள். அவர் சொன்னார், இப்பொழுது அவை எல்லாம் உன்னு டையது, அங்கே எமோரியர்கள், ஏவியர்கள், பெரிசியர்கள் இன்னும் மற்ற எல்லாரும் அங்கே இருந்தார்கள். மேலும், ஏவியவரும், எபூசியரும், பெலிஸ்தியரும் இன்னும் எல்லாரும் அந்த பாலஸ்தீனத்தில் இருந்தார்கள். இப் பொழுது, தேவன், “நான் அதை உனக்கு கொடுத்திருக் கிறேன், அது உன்னுடையது, இப்பொழுது நீ போய் அதை சுதந்தரித்துக் கொள்ளலாம்” என்று சொன்னார். 58. ஓ, ஜனங்களாகிய நீங்கள் அதை காண்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அது நான் உங்களுக்கு புரிய வைக்க விரும்பும் ஒரு காரியமாய் இருக்கிறது. உங்கள் விசுவாசத்தை அது இருக்க வேண்டிய இடத்தில் வைக்க நான் விரும்புகிறேன். அநேக மக்கள் நான் பார்த்த வண்ணமாக அவர்களுக்கு விசுவாசம் இருக்கும் ஆனால், அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று மாத்திரம் அவர்களுக்கு தெரிந்தால் நலமாய் இருக்கும். 59. முதல் முதலாக பென்ஜமின் பிராங்கிளின் மின் சாரத்தை கண்டுபிடித்த போது, அவர் “எனக்கு கிடைத்து விட்டது, எனக்கு கிடைத்துவிட்டது” என்று கத்தினார். ஆனால், அவருக்கு என்ன கிடைத்தது என்று அவருக்கு தெரியவில்லை. 60. அதன் பிறகு, தாமஸ் எடிசன் அங்கே வந்தபோது, அவர் “அது நமக்கு கிரியை செய்யும்” என்று சொன்னார். மேலும், அதற்கு எவ்வளவு காலம் பிடித்தாலும் அதை குறித்து அவர் கவலை கொள்ளவில்லை. அவர் ஆயிரக் கணக்கான கடத்திகளை கொண்டு முயற்சித்து பார்த்தார். இறுதியில் மின்சாரத்தை கடத்தக்கூடிய ஒரு மின்கம்பியை அவர் கண்டுபிடித்தார். அது ஒரு சத்தியாய் இருக்கிறது என்று அவர் அறிந்திருந்தார். மேலும் அந்த சக்தி அஹ்ர் களுக்கு பிரயோஜனப்படும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அந்த சக்தியானது நம்முடைய பிரயோஜனத்துக் காக பயன்படும் என்றும் கண்டு கொண்டார். 61. அதுபோல, இப்பொழுது நாம் இரட்சிப்பை கண்டு கொண்டோம். அது ஒரு மோசமான ஸ்திரீயையோ, மனிதனையோ, ஒரு குடிகாரனையோ, ஒரு வேசியையோ எடுத்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றும் என்பதையும் கண்டு கொண்டோம். நல்லது, அதே விசுவாசம்... அந்த அதே வல்லமையானது (சக்தி) ஒரு விழுந்து போன மனிதனையோ ஸ்திரியையோ தூக்கி விடும், அது பல வழிகளில் நமக்கு பிரயோஜனமாய் இருக் கிறது. உங்களால் அந்த சரியான அணுகுமுறையை கண்டு பிடிக்க முடிந்தால், அது நம்முடைய சரீரங்களை சுகமாக்கு கிறது. ஆகவே, அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்கிற விதத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். 62. எப்படி என்றால், ஒருவேளை அந்த மலையின் மேல் எனக்கு ஒரு வயல் இருந்து, அது முழுவதும் சோளம் விதைக்கப்பட்டு தண்ணீர் இல்லாமல் அது கிட்டத்தட்ட காய்ந்து போய் இருக்கிறது என்று வைத்துக் கொள் வோம். ஆனால், மலைக்கு அந்தப் பக்கத்தில் அங்கே ஒரு ஆர்ட்டீசியன் ஊற்று இருக்கிறது. நல்லது, இப்பொழுது அந்த ஆர்ட்டீசியன் ஊற்று மலைக்கு இந்த பக்கத்தில் இருக்கிற என்னுடைய வயலுக்கு தண்ணீரை பாய்ச்சும் படி என்னால் செய்ய முடியாது. ஆனால், நான் அதை ஆராய்ந்து பார்த்து அந்த நீரோட்டம் எந்த பக்கமாக செல்லுகிறது என்பதை கண்டுபிடித்து அதன் போக்கிலேயே அதைக் கொண்டு வந்து என்னுடைய விளைச்சலுக்குள் விடுவேன் என்றால், அதனுடைய சொந்த பாதையில் ஒருவேளை நான் பாய விடுவேன் என்றால், அப்பொழுது அது எனக்குப் பலன் அளிக்கும். 63. மேலும், பரிசுத்த ஆவியும், தேவனுடைய வாக்குத் தத்தமும் கூட அதே விதமாக தான் இருக்கிறது. நாம் மாத்திரம் அதன் போக்கிலே அதை போக விடுவோம் என்றால், அதன் வழியில் நாம் குறுக்கிடாமல் இருப்போம் என்றால், அதன் வழியில் நம்முடைய சந்தேகங்களை தூக்கி எறியாமல் இருப்போம் என்றால், அப்படி என்றால் இது ஏன் இப்படி? அது ஏன் அப்படி? என்று சொல்லாமல் வெறுமனே தேவனுடைய பரிசுத்த ஆவியை கிரியை செய்ய விட்டுவிட்டு நீங்கள் மாத்திரம் அவருடைய வாக்குத்தத்தத்தின் மேல் இளைப்பாறிக் கொண்டிருப்பீர்கள் என்றால், அது என்ன செய்யும் என்று தேவன் கூறினாரோ அதை சரியாக அது செய்துவிடும். 64. சர்வ வல்லமையுள்ள தேவன் என்ற பெயரில் தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமான போது, ஆபிரகாம் வயதானவனாய் இருந்தான், நூறு வயது உள்ளவனாய் இருந்தான். “சர்வ வல்லமையுள்ள” என்கிற வார்த்தை எபிரேய பதமாகிய “எல் ஷடாய்” என்ற பதத்தில் இருந்து வருகிறது. அதனுடைய பொருள் என்னவென்றால், “மார்பு அல்லது ஒரு பெண்ணின் மார்பகம்”. இப்பொழுது அவன் வயதானவனாய் இருந்தான். அவனுடைய பெலன் குன்றி போயிருந்தது. ஆனால், சர்வ வல்லமையுள்ள ஏல் ஷடாய் அந்த பெலன் அளிப்பவர், அங்கே ஆபிரகாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னவாயிருந்ததென்றால் அந்த வாக்குத்தத்தத்தின் மேல் அவன் சார்ந்து கொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. வேறொரு வார்த்தையில் செல்ல வேண்டும் என்றால் தாய்க்கு சேயை போல, குழந்தையை பலப்படுத்த, தாயிடமிருந்து வரும் போஷாக்கு போல அவனும் செய்ய வேண்டியவனாய் இருந்தான். 65. நாமும் கூட தேவனிடத்தில் வரும்பொழுதும் அவருடைய வாக்குத்தத்தத்தை பார்க்கும் பொழுதும் அதே காரியத்தை தான் நாமும் செய்கிறோம். நாம் அப்படியே அவர் மேல் சாய்ந்து கொண்டு அவருடைய வார்த்தை யிலிருந்து தேவனுடைய பெலனை உறிஞ்சிக்கொள்கிறோம். நம்முடைய சொந்த எண்ணத்தின் படி இல்லாமல் அவரு டைய போக்கிலேயே சென்று, அப்படியே விசுவாசத்தின் மூலம் அதைப் பெற்றுக் கொள்கிறோம். 66. அவன் விசுவாசத்தைக் காத்துக் கொண்ட பொழுது அந்த வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொண்டான். ஓ, நான் அதை நேசிக்கிறேன்! இப்பொழுது இரட்சிப்பும் கூட அதே விதமாக தான் கிரியை செய்கிறது. தெய்வீக சுகமும் கூட அதே விதமாக தான் கிரியை செய்கிறது. எப்படியாக தேவன் தம்முடைய மகத்தான அன்பினாலும், முடிவில்லாத இரக்கத்தினாலும் நமக்கு அதை கொடுக்கிறார்! இப்பொழுது: உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான். 67. 16 -வது வசனம்: மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடு வார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. 68. வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில், ஒரு உறுதிமொழி கொடுக்கப்பட்டு விட்டால், பின்னர் அதுவே எல்லா காரியத்திற்குமான முடிவாய் இருக்கிறது. நீங்கள் வந்து, சகோதரன் பிரன்ஹாம் நான் ஒரு கிறிஸ்தவனாக இந்த வேதாகமத்தின் மீது என் கையை வைத்து உமக்கு நான் இன்ன காரியத்தை செய்வேன் என்று பயபக்தியோடு சத்தியம் செய்கிறேன் என்றும், அதை செய்யும்படிக்கு ஒரு வேளை எனக்கு தேவன் ஜீவனை அளிப்பார் என்றால் நான் அதை செய்வேன் என்றும் சொல்வீர்கள் என்றால், நல்லது, அதன் பிறகு என்னை பொறுத்தவரை அதுவே எல்லா சந்தேகத்திற்கும் முடிவாய் இருக்கும். பாருங்கள்! ஏனென்றால், நீங்கள் அதை நிச்சயமாக செய்வேன் என்று எனக்கு ஆணையிட்டுவிட்டீர்கள். 69. மேலும், தேவன் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தான் பண்ணின உடன்படிக்கையை என்றென் றைக்கும் காத்துக்கொள்வதாக அவனுக்கு ஆணையிட்டார். தேவன் அதை செய்வேன் என்று தம் பேரிலே தானே ஆணையிட்டார். அவ்வாறு செய்கையில்... 70. பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையின் கீழாக நீங்கள் ஏதாவது ஒரு உடன்படிக்கை செய்து கொள்வீர்கள் என்றால், ஒரு மிருகத்தை கொன்று அதை இரண்டு துண்டாக்கி, இரண்டு மனிதர்களுக்கும் இடையேயான அந்த உடன்படிக்கையை ஒரு காகிதத்தில் எழுதி அந்த காகிதத்தை இரண்டு துண்டுகளாகக் கிழித்து அந்த உடன் படிக்கையை செய்கிறவர்கள் இரண்டு துண்டாக பிளக்கப் பட்ட அந்த மிருகத்துக்கு நடுவாக நின்று, ஒருவர் ஒரு துண்டு காகிதத்தையும், இன்னொருவர் இன்னொரு துண்டு காகிதத்தையும் எடுத்துக் கொள்வார்கள். இப்பொழுது மரித்த அந்த மிருகத்தின் மேலாக அவர்கள் அந்த ஆணையை செய்வார்கள். மேலும், அவர்களிடையே செய்யப்பட்ட அந்த உடன்படிக்கையை உடைத்து போடும் பொழுது, உடைக்கிறவருக்கு அந்த மிருகத்துக்கு நேர்ந்த நிலை தான் நேரிடும் என்பதை அது குறிக்கும். 71.ஆகவே, தேவனுக்கு ஆணையிடும்படிக்கு தம்மிலும் பெரியவர் இல்லாததினால் அவர் தம்மைக் கொண்டே ஆணையிட்டார். மேலும், அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை நிழலாட்டமாக முன்கண்டு, அவரு டைய சரீரத்திற்கு மேலாக ஆணையிட்டார். இந்த உடன் படிக்கையில் அவர் கிறிஸ்துவை கல்வாரிக்கு கொண்டு சென்ற பொழுது, அவருடைய சரீரத்தையும் அவருடைய ஆத்துமாவையும் அவர் இரண்டாகப் பிளந்தார். மேலும், அவர் அவரை தம்முடைய வலதுபாரிசத்தில் அமரச் செய்யும்படி அவருடைய சரீரத்தை மேலே உயர்த்தினார். அதன் பிறகு அவர் இந்த பூமியின் மேல் இருந்தபொழுது கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக இருந்து செய்த அதே கிரியைகளை இப்பொழுது சபைக்குள்ளாக இருந்து கிறிஸ்தவர்கள் மூலமாக செய்வதற்காக பரிசுத்த ஆவியை அனுப்பினார். அதன் மூலம் அவர் நம்மை இந்த கடைசி நாட்களில் எழுப்பி அவரோடு அவருடைய ராஜ்யத்தில் அவருக்கு அருகில் அமரச் செய்வார் என்பதை இதன் மூலம் நிரூபித்தார். 72. மேலும், இயேசு கிறிஸ்துவின் மேல் இருந்த அதே பரிசுத்த ஆவியானவர், தேவன் சொன்ன ஒவ்வொன் றையும் உறுதிப்படுத்தும்படி இன்று சபையில் கிரியை செய் கிறதை காண்கிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம் என்றும், அவருடைய பிரசன்னத்தினால் ஆசீர்வதிக்கபட்டிருக்கிறோம் என்றும் நினைக்கும் போது, அது எப்பேர்ப்பட்டதான ஒரு ஆச்சரியமான நம்பிக் கையை நமக்குள் கட்டி எழுப்புகிறது! மேலும் ஆபிரகா முக்கு வாக்குத்தத்தம் செய்த தேவனாகிய கர்த்தர் அவர்தான், என்ற வீழ்ந்து போகாத நிரூபணமாக இப்பொழுது இங்கே அவர் நம்மோடு இருக்கிறார். 73. இப்பொழுது கவனியுங்கள், அந்த 17 வது வசனம். அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவை களைச்சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக் கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும் படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்: 74. என்ன ஒரு ஆச்சரியமான வாக்குத்தத்தம்! “இரண்டு மாறாத விசேஷங்கள்” தேவன் பொய் சொல்லி தேவனாய் இருக்க முடியாது. இப்பொழுது, தேவன் தம்முடைய வேதத்தில் இங்கே ஏதாவது ஒரு வாக்குத் தத்தத்தை செய்திருப்பார் என்றால், இந்த வேதாகமத்தை தேவனுடைய தவறிழைக்க முடியாத வார்த்தை என்று நாம் விசுவாசிக்கிறோம். மேலும், தேவன் இந்த வேதாகமத்தில் ஒரு வாக்குத்தத்தத்தை செய்திருப்பார் என்றால், தேவன் பொய்சொல்ல முடியாது என்று அறியும்போது அது நமக்கு மிகப்பெரிய ஒரு ஆறுதலை அளிக்கிறது. ஆகையால் அவர் அதை வேதாகமத்தில் வாக்குத்தத்தம் செய்கிறதை நாம் காணும் பொழுது, நாம் அதை நம்முடைய ஆத்துமா வோடும், சரீரத்தோடும், ஆவியோடும் விசுவாசிக்கிறோம். பொய் சொல்வது என்பது அவருக்கு கூடாத காரியம். இப்பொழுது, அங்கே ஏதாவது ஒரு தவறு காணப்பட்டால், அந்த தவறு நம்மிடம் தான் இருக்கிறது. தேவனிடத்தில் அல்ல. ஏனென்றால், தேவன் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டவராய் இருக்கிறார். ஏனென்றால், அவர் தம்மு டைய வார்த்தையைக் கொண்டே ஆணையிட்டிருக்கிறார். ஓ, என்னே! 75. அந்த வெளிச்சத்தில் நாம் அதை பார்க்க ஆரம்பிக்கும் போது அவை வழக்கமாக இருக்கிறதைக் காட்டிலும் வித்தியாசமான விதத்தில் வடிவம் பெற்று உயர எழும்புகிறது என்பதில் நான் நிச்சயமுடையவனாய் இருக் கிறேன். சரீரசுகம் என்பது ஒரு கற்பனையாக மாறு வதில்லை, அது உண்மையாக மாறுகிறது. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பதும் ஒரு உணர்ச்சிவசப் படுதலாகவோ, மிகவும் கிளர்ச்சியடைந்ததாகவோ அது மாறுவதில்லை. அது நம்முடைய ஜீவியத்தை மாற்றுவதற்கு நமக்குள்ளே வாசம் செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின் அசலாக அது மாறுகிறது. 76. ஒரு சில இரவுகளுக்கு முன்பாக ஒரு ஜெபக் கூட்டத்தில் ஒரு மனிதன் என்னிடத்தில், “பெந்தெ கொஸ்தே நாளிலே அதிகமான பேருக்கு பரிசுத்த ஆவி அருளப்படவில்லை, வெறும் பத்து அல்லது பன்னிரண்டு பேருக்கு மாத்திரமே அருளப்பட்டது” என்று சொன்னார். 77. நான் சொன்னேன், “நல்லது அப்படி என்றால் ஒரே நேரத்திலே அங்கே கூடியிருந்த நூற்றிருபது பேர் அதைப் பெற்றுக்கொண்டார்களே அதைக் குறித்து என்ன? கொர்நேலியுவின் வீட்டிலே புறஜாதிகள் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்ட பொழுது அங்கே நடந்தது என்ன? அதற்கு முப்பத்து மூன்று வருடங்கள் கழிந்து ஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களிடம் பவுல், “நீங்கள் விசு வாசிகள் ஆனபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா? என்று கேட்டு அவன் அவர்கள் மேல் தன் கைகளை வைத்த பொழுது அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டார்களே! கொரிந்துவில் சபையை ஒழுங்கில் அமைத்தானே! மேலும் அவர் சபையை ஒழுங்குபடுத்துவதற்கு அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசி களையும், போதகர்களையும், சுவிசேஷகர்களையும், சுகமளிக்கும் வரங்களையும், இன்னும் அதுபோன்ற ஆச்சரியமான வரங்களையும் பெந்தெகொஸ்தே முடிந்து அநேக வருடங்களுக்குப் பிறகும் கூட செய்தாரே! 78. மேலும், இன்றைக்கு அது, ஒவ்வொரு விசு வாசிக்கும். “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக் கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்.” எவ்வளவு தூரம்? உலகமெங்கும். எத்தனை பேருக்கு? அனைத்து மக்களுக் கும். “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்தானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களை பின் தொடரும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார்கள், வியாதியஸ்தர்களை சொஸ்த மாக்குவார்கள், இன்னும் அது போன்ற காரியங்கள்.” 79. அங்கேதான் காரியம். அது தேவனுடைய வாக்குத் தத்தம், அவர் அப்படிச் செய்வதாக ஆணையிட்டிருக்கிறார். எவ்வளவு பேர் எழும்பி அதை போலியாக செய்யவோ, ஆள் மாறாட்டம் செய்யவோ முயற்சித்தாலும் அது ஒரு காரியம் இல்லை. எத்தனை காரியங்கள் எழும்பி அதற்கு முரண்படும்படியாகவும், அல்லது அதை வீழ்த்தும்படியா கவும் முயற்சித்தாலும் அது தொடர்ந்து மேலும், மேலும் என்றென்றைக்குமாக போய்க் கொண்டே இருக்கும். ஏனென்றால், அதைக் காத்துக் கொள்ளப் போவதாக தேவன் தம் பேரில் தாமே ஆணையிட்டிருக்கிறார். நான் அதை பிரசங்கிக்கத் தவறினாலும், நான் அதை கீழே போட்டு விட்டாலும் தொடர்ந்து அதோடு கூட செல்லும் படியாக தேவன் வேறொரு நபரை என்னுடைய ஸ்தானத்தில் எழுப்புவார். நீங்கள் அதை விசுவாசிக்கத் தவறினாலும் அதை விசுவாசிக்கும் படியாக உங்களுக்குப் பதிலாக உங்களுடைய ஸ்தானத்தில் வேறொருவர் உள்ளே பிரவேசிப்பார். ஏனென்றால், அப்படிச் செய்வதாக தேவன் ஆணையிட்டிருக்கிறார். ஓ, அது எப்பேர்ப்பட்ட ஒரு ஆறுதலை நமக்குக் கொடுக்கிறது! 80. மேலும், என் கிறிஸ்தவ நண்பனே, அதில் இருக்கிற அழகான பாகம் என்னவென்றால், அதற்கான சான்று நம்மிடத்தில் இருக்கிறது என்பதைக் குறித்து நினைத்துப் பார்ப்பது தான். நாம் அதை இங்கே ஆசிர்வாதமாக பெற்றிருக்கிறோம். நாம் அதை வல்லமையில் பெற்றிருக் கிறோம். நாம் அதை அற்புதங்களில் பெற்றிருக்கிறோம். நாம் அதை அடையாளங்களில் பெற்றிருக்கிறோம். நாம் அதை புகைப்படத்தில் பெற்றிருக்கிறோம். தேவன் அதை எந்த விதத்திலெல்லாம் வாக்குத்தத்தம் செய்தாரோ அந்த விதத்திலெல்லாம் நாம் அதைப் பெற்றிருக்கிறோம். அவர் நமக்குக் கொடுப்பதாக வாக்குத்தத்தம் பண்ணினதைக் காட்டிலும் அதிகமான அளவில் நாம் அதைப் பெற்றிருக் கிறோம். மேலும், அது தவறிழைக்க முடியாததாய் இருக் கிறது. அந்த சத்தியம். அந்த சத்தியம், மனிதனுடையதல்ல. அது ஒரு போதகன், அல்லது ஒரு தத்துவ மேதையின் சத்தியம் அல்ல. ஆனால், அது சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சத்தியமாய் இருக்கிறது. மேலும், அது எப்பேர்ப்பட்ட ஒரு நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது! ஆகவே, நாம் இப்படிப் பாடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை: என் மீட்பர் இரத்தம் சிந்தினார், மா நீதியும் சம்பாதித்தார், கார்மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம் அவரை எப்போதும் போல நம்புவேன், மாறாதவர் என்றறிவேன். நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான் வேறஸ்திபாரம் மணல் தான். 81. அது புகழாகட்டும், அல்லது நம்முடைய சபையா கட்டும், அல்லது நம்முடைய நண்பர்களாகட்டும், அல்லது நம்முடன் பணிபுரிவர்களாகட்டும், அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அது நம்முடைய மருத்து வராக இருக்கட்டும், அது நம்முடைய போதகராக இருக் கட்டும், அது நம்முடைய பிரசங்கியாக இருக்கட்டும்; மற்ற எல்லா நிலமும் மூழ்கும் மணல்தான். கிறிஸ்து, மாத்திரமே! மேலும், துயரம் நிறைந்த இந்த யுத்த களத்தில் சாதித்த ஒவ்வொரு மனிதனும், அவர்கள் புருஷர்களானாலும் சரி, ஸ்திரீகளானாலும் சரி, அவர்கள் மனசாட்சியில் குத்தப்பட்ட வர்களாய் தனிமையில் நின்ற பொழுது, அவர்களைச் சுற்றிலும் இருந்த எல்லாமே தோல்வி அடைந்த போதும், அவர்கள் இன்னுமாக உறுதியாய் நின்றார்கள். 82. ஆபிரகாம் லிங்கன், தான் சரியாக இருந்ததாக நம்பினார். அவர் தன்னுடைய நம்பிக்கையின் பேரில் தனிமையாக நிற்க வேண்டியதாயிற்று, இருப்பினும், அவர் அதை நிரூபித்தார். மேலும் அவருடைய சொந்த இரத்தத்தை கொண்டு அவருடைய சாட்சியை முத்திரை யிட்டார்.. 83. ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய நித்தியமான சத்தியத்தின் பேரிலான தன்னுடைய திட நம்பிக்கையின் மேல் தன்னுடைய நிலைப்பாட்டை நிலை நிறுத்தும்போது, அவன் தனியாக நிற்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக இயேசு கிறிஸ்து தன்னுடைய நாளில் தனிமையாக நின்றார். ஆனால் தனியாக நிற்க வேண்டிய தில்லை, காணக்கூடாத உற்ற துணையான தேவனோடு! அவர் நம்முடைய ஜீவிய பாதையிலும், இருளான பாதை யினூடாகவும், நித்தியத்திற்குள் பிரவேசிக்கும் மரண இருளின் பள்ளத்தாக்கின் ஊடாகவும் நம்மை பின்தொடர் வார். அவர் தேவனாக இருந்து நம்மோடு கூட செல்வார். 84. அப்படியென்றால், இந்த காலை வேளையிலே நம்முடைய நம்பிக்கை எதன்மேல் கட்டப்பட்டிருக்கிறது? ஏனென்றால், தேவன் அதை ஆபிரகாமுக்கு செய்வதாக வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆபிரகாமுக்கு மாத்திரம் அவர் வாக்குத்தத்தம் செய்யவில்லை, ஆனால், அவரு டைய சந்ததியாயிருக்கிற ஒவ்வொருவருக்கும். யார் அந்த சந்ததி? கர்த்தராகிய இயேசுவிடம் வரும்படியாக அழைப்பு விடுக்கப்பட்ட நீங்கள் தான் அந்த ஆபிரகாமின் சந்ததி. நிச்சயமாக. அழைக்கப்படாத ஜனங்களும் இருப்பார்கள். ஆனால், இந்த காலை வேளையிலே, இங்கே இருக்கிற உங்கள் ஒவ்வொருவருக்கும் அந்த அழைப்பு இருந்தது. 85. நீங்கள் ஏன் இந்த காலை வேளையிலே இந்த சபையில் இருக்கிறீர்கள்? ஏதோ ஒன்று இங்கே வரும்படி உங்களிடம் சொன்னது. அது நிச்சயமாக சத்துரு இல்லை என்று உங்களுக்கு தெரியும். அவன் உங்களை தவறான காரியங்களை செய்ய வைக்க தான் முயற்சிப்பான். உங்களை தவறு செய்ய தான் அவன் தூண்டுவான், சபைக்கு வருவதற்கு அல்ல. நீங்களும் அதை செய்ய முடியாது. நீங்கள் சபைக்கு வரும்பொழுது நீங்கள் சரியான காரியத்தை செய்கிறீர்கள். 86. “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால், ஒருவனும் என்னிடத்தில் வரமாட்டான்” என்று இயேசு தம்முடைய சொந்த வாக்கினாலே சொல்லி இருக்கிறார். “மேலும், என்னிடத்தில் வருகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனை அளித்து, கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்” என்றும் சொல்லுகிறார். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்பின் பேரில் வருகிற ஒவ்வொரு நபருக்கும் நித்திய ஜீவனும், கடைசி நாட்களில் உயிர்த் தெழுதலும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்வதாக ஆணையிட்ட அதே யெகோவா தேவன், தம்முடைய குமாரனை அனுப்பி வார்த்தையை உறுதிப்படுத்தினார். மேலும், அவர் அப்படிச் செய்வதாக ஆணையிட்டார்; அதை ஒரு மாதிரியாக ஆபிரகாமுக்கு செய்து காண்பித்து; இயேசு கிறிஸ்துவை உயிரோடு எழுப்பி அவருக்குள் அதை நிறைவேற்றினார்! ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும் போது, அவர் என்னை ரட்சித்தார்; அடக்கம் பண்ணப்படும் போது, அவர் என் பாவங்களை வெகு தூரம் கொண்டு சென்றார்; உயிர்த்தெழுகையில், அவர் என்றைக்குமாய் இலவசமாய் என்னை நீதிமானாக்கிவிட்டார்; ஒரு நாளில் அவர் வருகிறார் - ஓ, மகிமையான நாள்! 87. அங்கே தான் காரியம். நம்முடைய நீதிமானாக்கப் படுதல்! ஒவ்வொரு முறையும் அந்த சவப்பெட்டியின் மீது மண் கட்டிகள் விழுந்து, “சாம்பலுக்குச் சாம்பலாகவும், புழுதிக்குப் புழுதியாகவும், மண்ணுக்கு மண்ணாகவும்” என்ற வார்த்தைகளை நீங்கள் கேட்கும் பொழுது, நம்முடைய விசுவாசம் எங்கோ தூரத்தில் இருக்கிற வேறொரு தேசத்தை நோக்கிப் பார்க்கிறது. அங்கே ஒரு காலியான கல்லறை இருக்கிறது; ஒரு மகிமையான நாளில், “வருவேன்” என்று வாக்குத்தத்தம் செய்தவர் வருவார். மேலும், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நாமும் அவரோடு கூட உயிர்த்தெழுதலில் எழும்புவோம். எப்படிப் பட்ட ஒரு அழகான நம்பிக்கை நமக்கு இருக்கிறது! 88. இப்பொழுது, சீக்கிரமாக பார்ப்போம். நாம் அறிந்துகொள்வதற்கு முன்பாகவே நம்முடைய நேரமானது நம்மை விட்டுப் போய்விடும். இப்பொழுது, அது 19 ஆம் வசனத்தில் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும், உறுதியும், திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக் கிறது; 89. திரைக்குள்ளாகச் சென்று, திரைக்கு அப்பால் சென்று நங்கூரமிட்டிருக்கிற நம்முடைய ஆத்தும நங்கூரம். 90. உங்களுக்கு தெரியுமா? ஒரு கப்பல், சில நேரங்களில்... அதில் வேலை செய்கிறவர்களுக்கும் இன்னும் அதோடு சம்பந்தப்பட்டவர்களுக்கும் அதைக் குறித்து தெரியும். கடலில் யாத்திரை செய்பவர்களுக்கும் அது தெரியும். அலைகள் அந்த படகின் மேல் கடினமாக மோதி அடிக்கும் பொழுது, அவர்கள் அதை நங்கூரமிட்டு பிடிக்கச் செய்கிறார்கள். மேலும், அதிலிருந்து இறக்கிவிடத் தக்கதாக ஒரு கயிறு இருக்கும், அதுதான் அந்த படகு அல்லது கப்பலை தாங்கிப் பிடிக்கிறது. அந்த அலையானது அந்தக் கப்பலை இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மற்றும் சுற்றிலும் எல்லாவிதத்திலும் மோதியடிக்கும் பொழுது, அந்த நங்கூரமானது அதை உறுதியாக பிடித்துக் கொள்கிறது. அவர்களால் எங்கேயுமே தரையை பார்க்க முடியாது ஆனால், அவர்கள் திரைக்கு அப்பால் அந்த நங்கூரத்தை இறக்கி விடுகிறார்கள் அதுதான் தண்ணீர், அங்கே அந்த நங்கூரமானது அந்த கடலுக்கு அடியில் ஆழத்தில் தொடர்ந்து சென்று அங்கு இருக்கிற ஏதோ ஒரு பெரிய மலையின் மீது அது படுகிறது, அப்பொழுது, அந்த நங்கூரமானது அந்த மலையின் பிளவிலோ அல்லது முகட்டிலோ மாட்டிக் கொள்ளும். இப்பொழுது கடல் முழுவதும் கொந்தளித்தாலும் இனிமேல் அந்த கப்பலை ஒன்றும் செய்ய முடியாது. அது பார்வைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டு விட்டது. 91. ஆகவே, இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு நபரும் பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்து நீங்கள் உங்கள் நங்கூரத்தை இறக்கிவிட்டிருக்கிறீர்கள். நீங்கள் வியாதியாய் இருந்தால், உங்கள் நம்பிக்கை கிறிஸ்துவின் மேல் கட்டப் படுகிறது. நீங்கள் உங்கள் நங்கூரத்தை இறக்கி விடுகிறீர்கள். டாக்டர்கள் இது, அது அல்லது மற்றதை சொல்லலாம், ஆனால், உங்களுடைய விசுவாசத்தினால் நீங்கள் அக்கரையை பார்க்கிற வரைக்கும் அலைகள் அதிகரிக் கலாம், வியாதி அதிகரிக்கலாம், காய்ச்சல் அதிகரிக்கலாம், இன்னும் அது போன்ற காரியங்கள், ஆனால், உங்கள் நங்கூரமோ திரைக்குள்ளாகப் பாய்ச்சப்பட்டு உறுதியாக பிடித்துக் கொள்கிறது. 92. எங்கேயோ இருக்கின்ற ஒரு கற்பனையான இடத்தில் அல்ல. உங்கள் நம்பிக்கைகள் எதன்மேல் கட்டப்பட்டுள்ளது? மருத்துவர்கள் முடிந்து விட்டது என்று சொல்லிவிட்டார்கள்; மருத்துவம் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறது; அறுவை சிகிச்சைகள் தோல்வி அடைந்து விட்டன. ஆனால் என்னுடைய நம்பிக்கைகளோ இதனுள்ளாக கட்டப்படவில்லை. 93. மாறாக, நாம் நம்முடைய நம்பிக்கையை திரைக் குள்ளாக வைத்திருக்கிறோம். எந்த திரை? சிந்தப்படுகிற அவருடைய இரத்ததினூடாக, அது அவருடைய சரீரத்தி னின்று அவருடைய ஆவியை கிழித்தெடுத்தது. அந்த திரையினூடாக ஏதோ ஒன்றை நங்கூரம் பிடித்துக் கொண்டது.. 94. ஒருமுறை ஒரு கப்பல் மீது அலை மோதி அடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அந்தக் கப்பலை ஒரே இடத்தில் எது பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று நான் யோசித்தேன். “சமுத்திரத் தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதா?” என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அப்பொழுது, நான் கவனித் தேன். அந்த அலைகள் அந்த கப்பலைச் சுற்றிலும் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் மோதி அடித்தும் கூட அது அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. என்னால் எதையுமே அங்கே காண முடியவில்லை. ஆனால், அங்கே ஒரு மெல்லிய கம்பி அல்லது கயிறு அந்தக் கப்பலின் மேல் தட்டில் இருந்து அதன் பக்கவாட்டில் ஒரு நங்கூரத் தோடு இணைக்கப்பட்டு கடலின் ஆழத்தில் ஏதோ ஒன்றில் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது. அது எங்கே என்று என்னால் காண முடியவில்லை. ஆனால், தண்ணீரில் ஆழத்தில் எங்கோ ஒரு இடத்தில் அது அதை பிடித்துக் கொண்டிருந்தது. அப்பொழுது நான், “தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக!” என்று சொன்னேன். 95. ஆம், ஒரு நாள், நான் ஒரு நங்கூரத்தைக் கண்டுபிடித்தேன். நான் இங்கே கீழே வாசிக்கிறேன், அது சொல்லுகிறது, “விருப்பமுள்ளவன் எவனோ அவன் வரக் கடவன்.” நான் அந்த நங்கூரத்தை கண்ணால் காண முடியாத ஒரு இடத்தில் போடுகிறேன். ஏதோ ஒன்று அதைப் பிடித்துக் கொள்கிறது. மேலும், யுத்தம் உக்கிர மாகும்போது, அந்த நங்கூரம் திரைக்குள்ளாக பற்றி பிடித் திருக்கிறது. அவிசுவாசிகள் எழும்பும்பொழுதும், தொல்லை கள் எழும்பும் பொழுதும், என்னை சுற்றிலும் உள்ளவர்கள் விட்டு விலகினாலும், நம்முடைய நங்கூரம் திரைக் குள்ளாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறது. அது எங்கே இருக்கிறது? அது எனக்கு தெரியாது. ஆனால், அது திரைக்கு அப்பால் எங்கோ தூரத்தில் காலமெனும் கற்பாறையின் மேல் நங்கூரமிடப்படுகிறது. நம்முடைய நங்கூரம் உறுதியாகவும், அசைக்க முடியாததாகவும், திரைக் குள்ளாக உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. “அந்த நம்பிக்கை நமக்கு நிலையும், உறுதியும், திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது.” 96. “நிலையும், உறுதியும்” ஓ, நமக்கு மாத்திரம் இன்னும் சற்று கூடுதலான நேரம் இருக்கும் என்றால், அந்த “உறுதி” என்பதன் பொருள் என்ன என்று பார்க்கலாம். “உறுதி” அது நீங்கள் அறிந்திருக்கிற ஏதோ ஒன்று. மேலும், அதைக் குறித்த “உறுதி” உங்களுக்கு இருக்கிறது. “உறுதி” என்றால் என்ன? “தேவன் தாம் அதை செய்யப் போவதாக ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.” அதுதான் அந்த உறுதி. 97. இங்கே சில நாட்களுக்கு முன்பு ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து, “பில்லி நான் ஒரு காப்பீட்டு பத்திரத்தை உமக்கு விற்பனை செய்ய வேண்டும்” என்று சொன்னார். 98. இப்பொழுது, காப்பீட்டு பத்திரம் என்பது அது பரவாயில்லை. எனக்கு அதுபோன்று எதுவும் கிடையாது. ஆனால் நான் அந்த விஷயத்தில் சற்று மிதமிஞ்சி போய் விட்டேன் என்று நினைக்கிறேன். ஒரு முறை ஒரு காப்பீட்டு கம்பெனி ஒரு காப்பீட்டு பத்திரத்தை பரிதாப மான என்னுடைய வயதான தந்தையின் தலையில் கட்டி விட்டது. ஏனென்றால், அந்த காப்பீட்டு பத்திரத்தை வாசித்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் கல்வி அறிவு இல்லாதவராய் அவர் இருந்தார். ஒரு கை தேர்ந்த வழக்கறிஞரால் கூட அந்த காப்பீட்டு பத்திரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முழுவதுமாக வாசிக்க முடிய வில்லை. ஆகவே, அவர்கள் எப்படியோ எங்கள் தந்தை யிடம் அந்த பத்திரத்தை விற்று விட்டார்கள். அவரும் அதற்கு பணத்தை செலுத்தி கொண்டு வந்தார். அது என்னுடைய சகோதரனுக்காகவும் எனக்காகவும் ஒரு இருபது வருடங்களுக்காக எடுக்கப்பட்டது. அவர்கள் அவரிடத்தில் சொன்னார்கள், “அந்த பத்திரம் முதிர்ச்சி அடையும் பொழுது அது ஐந்நூறு டாலர் பெருமானமுள்ள தொகையை கொடுக்கும்” என்று. ஆகவே, எல்லா விதமான பாடுகள் கஷ்டங்களுக்கும் மத்தியில் பாவம் அந்த மனிதன் அந்த கட்டணத்தை செலுத்திக் கொண்டு வந்தார். ஆனால், அது முதிர்ச்சி அடைந்த போது, அவர்கள் சொன்னார்கள், அவர்கள் அந்த பத்திரத்தை தவறாக வாசித்து விட்டதாக ஏனென்றால், “அது வெறுமனே ஏழு டாலர் மற்றும் ஐம்பது சென்ட் மாத்திரமே பெருமானம் உள்ளதாய் இருந்தது.” ஆகவே, அது எனக்கு ஒரு விதமான கசப்பான அனுப வத்தை உண்டாக்கி விட்டது. இப்பொழுது, அவர்கள் எல்லாரும் அப்படி இல்லை. ஏனென்றால், சரியாக இப்பொழுதே இங்கே அனேக காப்பீட்டு நிறுவன முகவர்கள் இருக்கிறீர்கள். 99. அநேக நேரங்களில், ஜனங்கள் என்னிடம் வந்து, “பில்லி நான் உங்களுக்கு ஒரு காப்பீட்டு பத்திரத்தை விற்பனை செய்யப் போகிறேன்” என்று சொல்லி இருக் கிறார்கள். இப்பொழுது, அது முற்றிலும் சரியானது தான் என்று நான் நினைக்கிறேன். நான் சொன்னேன், “பாருங்கள், எனக்கு ஏற்கனவே ஒரு காப்பீடு இருக்கிறது” என்று. 100. அதற்கு அவர், “என்ன விதமான காப்பீட்டை நீர் வைத்திருக்கிறீர்? என்ன பத்திரம் நீர் வைத்திருக்கிறீர்?” என்று கேட்டார். அதற்கு நான் “நித்திய ஜீவன்” என்று சொன்னேன். அவர், “நித்திய ஜீவனா? ” என்று கேட்டார். நான், “ஆம், ஐயா. ” என்று சொன்னேன். அவர், “அது போன்ற பத்திரங்களை யார் விற்பனை செய்வது?” என்று கேட்டார். அதற்கு நான், “அது கர்த்தராகிய இயேசு” என்று சொன்னேன். அவர், “அப்படியானால் உங்களுக்கு ஒரு காப்பீட்டு பத்திரம் இருக்கிறது இல்லையா? ” என்றார். நான், “ஆம், ஐயா. ” என்று சொன்னேன். அதற்கு அவர் “அது உண்மையில் எப்படிப்பட்டது? அது என்ன பில்லி? ” என்று கேட்டார். நான், “அது ஒரு காப்பீடு தான்” என்று சொன்னேன். அவர், “என்ன? ” என்றார். 101. நான் சொன்னேன், “ஆசீர்வதிக்கப்பட்ட உறுதிப் பாடு. இயேசு என்னுடையவர்!. ஓ, தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன் சுவை.” 102. அவர் என்னுடைய பாலிய நண்பன். அவர் அந்த தெருவின் அந்தப் பக்கத்தில் அங்கே நின்று கொண்டிருந் தார். அவர் என் தோளைச் சுற்றி தன் கைகளை போட்டு, “பில்லி, உம்மை இங்குள்ள கல்லறைக்குள் வைக்க அந்த காப்பீடு உதவாது” என்றார். 103. அதற்கு நான், “அது எனக்கு தெரியும் ஆனால், அது என்னை அங்கே இருந்து வெளியே கொண்டு வரும், நான் அதற்குள் எப்படி போவது என்று கவலைப்பட வில்லை ஆனால், அது அதற்குள்ளாக இருந்து என்னை வெளியே கொண்டு வரும்” என்றேன். அதுதான் சரி. 104. நான் என்னுடைய காப்பீட்டுப் பாத்திரத்தைக் குறித்து நினைத்துப் பார்த்தேன், நான் வியாதியாய் இருந்த பொழுது அது எனக்கு ஒரு நன்மையும் செய்யவில்லை. ஆனால், என்னுடைய இயேசு கிறிஸ்துவின் காப்பீட்டுப் பத்திரத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது அது எனக்கு “நிலையும், உறுதியுமான” ஒரு நங்கூரமாக இருந்தது. அது எப்படிப்பட்ட உறுதி என்றால், தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்த தம்முடைய ஒவ்வொரு வார்த்தையையும் காத்துக் கொள்வதாக தம்மைக் கொண்டே ஆணையிட்டார். 105. “நீ பிழைப்பதற்கு ஒரு சாத்தியக்கூறும் இல்லை” என்று மேயோ மருத்துவமனை கூறியது. உயிர் வாழ ஒரு நம்பிக்கையும் இல்லை. எனக்கு மோசமான எதுக்களிக்கும் பிரச்சினை இருந்தது, இறுதியில் அது என்னை கொன்று விடும் அளவில் இருந்தது. ஆனால் என்னுடைய நங்கூரம் திரைக்குள்ளாக பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது. “அப்படி யானால், நீ எதை காண்கிறாய்?” நான் என்ன காண்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அறிந் திருக்கும் ஏதோ ஒன்று அங்குண்டு. 106. அதுவாகத்தான் அது இருக்கிறது. அது உங்க ளுக்கு தெரியும். அது கிரியைகளினால் உண்டாகிறதல்ல. அது விசுவாசத்தினால் உண்டாகிறது. நாம் அதை விசு வாசிக்கிறோம். 107. ஆபிரகாம் என்ன விதமான மருத்துவ சான்றை மருத்துவரிடமிருந்து பெற்றிருந்தான்? அது மழ்-ண் மருத்துவ சங்கத்திலிருந்தா அல்லது வேறு எங்காவது இருந்தா? அவன் நூறு வயதுள்ளவனாயும், சாராள் தொண்ணூறு வயதுள்ளவளாயும் இருந்த பொழுது, அவர்கள் ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவனுடைய நங்கூரம் திரைக் குள்ளாகப் பாய்ச்சப்பட்டது. ஏனென்றால், தேவன் அவனுக்கு அந்த வாக்குத்தத்தத்தை செய்திருந்தார். அவன் அதன் மேல் இளைப்பாறினான். மேலும், இல்லாத வைகளை இருக்கிறவைகளை போல அழைத்துக் கொண்டிருந்தான். ஏனென்றால், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அதை செய்ய வல்லவராய் இருக்கிறார் என்று அறிந்து, இதோ அது இங்கே இருக்கிறது, தேவன் தாம் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார் என்பதே அது. 108. அவர் இந்த உலகத்தை உண்டாக்கினார். அவர் என்னை உண்டாக்கினார். அவர் எல்லாவற்றையும் உண் டாக்கினார். அவர் உன்னை உண்டாக்கினார். அவர் எல்லா வற்றையும் உண்டாக்கினார். ஒவ்வொன்றையும் தம்முடைய வார்த்தையினால் உண்டாக்கினார். மேலும், அவருடைய வார்த்தையானது, அது என்ன செய்யும் என்று அவர் கூறுகிறாரோ, அதையேதான் செய்யும். 109. இப்பொழுது, ஓ, எப்படி, என்ன ஒரு நம்பிக்கை! அந்த நம்பிக்கை நமக்கு நிலையும், உறுதியும், திரைக் குள்ளாகப் போகிறதுமான நங்கூரமாய் இருக்கிறது. 110. நாம் இப்பொழுது விரைவாக முடிக்க வேண்டும் ஏனென்றால், நமக்கு மிகப்பெரிய ஒரு ஜெப வரிசை வந்து கொண்டிருக்கிறது. 111. கவனியுங்கள், “அங்கே...” ஓ, என்னே! நல்லது, ஒவ்வொருவரும் இப்பொழுது கவனியுங்கள். 20 ஆம் வசனம், சற்று அதை கவனியுங்கள். நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்த திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். 112. எதற்கு முன்னோடி? சரீரப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் நம்முடைய இரட்சிப்புக்கு முன்னோடி. ஏனென்றால், நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமாக்கப்பட்டு இருக்கிறோம். நம்முடைய இரட்சிப்புக்கான முன்னோடி ஏற்கனவே உள்ளே பிரவேசித்து விட்டார். “அந்த உறுதி ஏற்கெனவே உள்ளே பிரவேசித்து விட்டது, இயேசுவே அந்த உறுதி.” ...மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித் திருக்கிறார். 113. இப்பொழுது நாம் இந்த தியானத்தின் பொருளை எங்கே பெற வேண்டுமோ அந்த இடத்திற்கு வந்து சீக்கிரமாக அதற்குள் பிரவேசிக்கப் போகிறோம். 114. இந்த வாக்குத்தத்தங்களை எல்லாம் நாம் ஒன்று திரட்டி சுருக்கி ஆபிரகாமின் வித்தாகிய நமக்கு முன்னோடினவராகிய இயேசு, பரிசுத்த ஆவியின் மூலமாக இப்பொழுது நாம் பெற்றிருக்கிற இந்த ஆசிர்வாதமான நம்பிக்கைக்கு நம்மை அழைத்திருக்கிறார் என்கிற ஒரு காரியத்துக்குள்ளாக கொண்டு வருகிறோம். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும், உறுதியும், திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாய் இருக்கிறது. அதற்கு இந்த இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின் படியான நித்திய பிரதான ஆசாரியராய் இருக்கிறார். 115. இப்பொழுது, இந்த மகத்தான மனிதனாகிய மெல்கிசேதேக்கு அடுத்த சில நிமிடங்களுக்கு நாம் அவர் பேரில் சற்று பேசுவோம். அடுத்த பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் சற்று வேகமாக அதை பார்ப்போம். 116. அதற்குப் பிறகு ஜெப வரிசைக்காக இப்பொழுது உங்கள் விசுவாசத்தை கட்டி எழுப்புங்கள். சாத்தான் உங்களிடமிருந்து எதையும் பறித்துக் கொள்ள இடம் கொடுக்காதீர்கள். இந்த காலை வேளையில் நீங்கள் இங்கே இந்த சிறு கட்டிடத்தில் இருக்கிறீர்கள். இந்த சிறிய எளிமை யான வசிப்பிடத்தில் சர்வ வல்லமையுள்ள தேவன் இறங்கி வருவார். நீங்கள் சொல்லுகிறீர்கள், “இது சற்று மோசமாக காணப்படுகிறது” என்று. ஆனால் அவர் ஒரு தொழுவத்துக் குள்ளாக வந்தார். 117. தன்னைத் திறந்து கொடுத்து, “ஆம், கர்த்தராகிய இயேசுவே, நான் அதை விசுவாசிக்கிறேன். நான் ஒரு வேளை அதை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனால், எப்படி இருந்தாலும் நான் அதை விசுவாசிக்கிறேன்,” என்று சொல்லக்கூடிய எந்த ஒரு தாழ்மையான இருதயத்திற்குள் ளாகவும் அவர் வருவார். 118. “கிறிஸ்து நமது முன்னோடியாக ஏற்கனவே வந்திருக்கிறார்” என்கிற ஒரு ஆசீர்வாதமான நம்பிக் கையை நாம் பெற்றிருக்கிறோம். ஒரு முன்னோடி என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? முன்னாலே ஓடுகிற ஒன்று. அல்லது முன் செல்கிற ஒன்று. கிறிஸ்து நம்முடைய இரட்சிப்பின் முன்னோடியாய் இருந்து கொண்டு இந்த பூமிக்கு வந்தார்; மேலும், சபைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்படியாகவும் அதாவது, அவர் தம்முடைய பலியை கல்வாரியில் செய்து நிறைவேற்றிய பிறகு, சபையானது அவருடைய வேலையை செய்து முடிக்க வேண்டும். அல்லது அவருடைய பணியை தொடர வேண்டும். நீங்கள் பாருங்கள்? கவனியுங்கள். 119. அவர் தாழ்மையில் பிறந்தார், சரியாக தொழுவத் தில். உங்களைப் போலவும், அல்லது அவருக்கு ஊழியம் செய்கிற மற்ற எவரும் பரிகாசம் பண்ணப்படுகிறது போலவே அவரும் பரிகாசம் பண்ணப்பட்டார்; ஆனால், “மனித மரியாதை கூட செலுத்தப்படாத” நிலையில் அவர் பூமியில் இருந்த பொழுது, அவரோ எல்லாரையும் நேசித்தார். அவர் எல்லாரையும் சுகமாக்கினார். அவர் எல்லாரையும் ஆசீர்வதித்தார். அவர் எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் நன்மை செய்தார். அவர் தம்முடைய சொந்த ஜீவனை பலியாக ஒப்புக்கொடுத்தார்; நமக்கு முன்னோடியாக, அவர் மரித்தார், அடக்கம் பண்ணப்பட்டார், உயிர்த்தெழுந்தார், உன்னதத்திற்கு ஏறினார். 120. மேலும், அவர் மேலிருந்த அதே ஆவியானவர் சபையை நடத்தவும் அதற்கு வழிகாட்டவும் சபைக்குள் திரும்பி வந்திருக்கிறார். “இன்னும் கொஞ்ச காலத்திலே இந்த உலகம் என்னைக் காணாது நீங்களோ என்னைக் காண்பீர்கள்.” “ஏனென்றால், உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்று பேசுகிறார். ‘நான்’என்பது தனிப்பட்ட பிரதிப்பெயர். இப்பொழுது திரைக்குள்ளாக நாம் பெற்றிருக்கிற அந்த ஆசீர்வாதமான நம்பிக்கைக்கு முன்னோடியாக இருந்து கொண்டு அந்த மகத்தான உன்னதமான பலிக்கு நேராக நம்முடைய இருதயங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். 121. அதன் பிறகு, விசுவாசத்தினால் நாம் அதை விசுவாசிக்கிறோம். ளஆஹ் ஊஹண்ற்ட் ரங் ஆங்ப்ண்ங்ஸ்ங் ஐற்ன நம்முடைய நங்கூரம் அங்கே கடந்து செல்கிறது. மேலும், அதன் முனையானது அது தேவனுடைய வார்த்தையில் திரைக் குள்ளாகச் சென்று ஒட்டிக்கொள்கிறது. இப்பொழுது ஒரு ஜெபவரிசை இங்கே வருகிறது, நாம் அந்த வாக்கு தத்தத்தை உறுதியாக பிடித்துக் கொள்ளும்படி செய்கிறது. தடுமாறாமல், சகலவித காற்றினாலும் அலைகழிக்கப் படாமல் ஆனால், உறுதியாக அசைக்க முடியாதபடி, ஏனென்றால், கர்த்தருக்குள் உங்கள் கிரிகைகள் ஒன்றும் வீணாய் போவதில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிற படியால் எப்பொழுதும் கர்த்தருடைய கிருபையில் வளர்ந்து பெருகுகிறவர்களாய் இருக்கும்படிக்கு. என்ன ஒரு நம்பிக்கை! 122. இப்பொழுது, இந்த மெல்கிசேதேக்கு சற்று அவரைக் குறித்து இங்கே பேசுவோம். எபிரேயர்களிடத்தில் பேசுகிற பவுல், பழைய ஏற்பாட்டின் காரியங்களை, ஒரு முன்னடையாளமாக குறிப்பிடுகிறார். 123. ஆதியாகமம் 14ஆம் அதிகாரத்திற்கு நாம் திருப்புவோம், நாம் தொடர்ந்து மேற்கொண்டு செல்வதற்கு முன்பாக அந்த மெல்கிசேதேக்கு யார் என்று பார்க்க நாம் அங்கே சற்று வாசிப்போம். நாம் அதை ஆதியாகமம் 14 ஆம் அதிகாரம் 14 ஆம் வசனத்தில் துவங்கி வாசிக்கலாம். 124. ஆபிரகாம், உங்களுக்கு தெரியும் அவன் கல்தேயர் தேசத்தில் இருந்த ‘ஊர்’ என்னும் பட்டணத்தில் இருந்து வெளியே அழைக்கப்பட்டவன் என்று. அல்லது கல்தேயர் தேசத்தில் இருந்து. மேலும், தேவன் அவனி டத்தில் “நீ உன் ஜனங்களை விட்டு உன்னை பிரித்துக் கொண்டு வெளியே வா” என்று சொன்னார். நான் அதன் பேரில் சற்று முக்கியத்துவம் கொடுக்கட்டும். ஓ, அதன் பேரில் நமக்கு இன்னும் சற்று கூடுதலாக நேரம் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இன்றைக்கோ! அது மிகவும் குறைவாக இருக்கிறது. 125. “உன் ஜனங்களை விட்டு வேறு பிரித்துக் கொண்டு வெளியே வா, அப்பொழுது நான் உன்னை ஆசீர்வதிப் பேன்” பாருங்கள்? 126. மேலும், ஆபிரகாம் பெற்றிருந்த அதே வாக்குத் தத்தத்தைப் பெறும்படிக்கு நீங்கள் எல்லாவிதமான உலக தொடர்புகளிலிருந்தும், உலக காரியங்களிலிருந்தும் உங் களை வேறு பிரித்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய பாவம் நிறைந்த ஆசைகள், உங்களுடைய இச்சைகள், உலக ஆசைகள், இன்னும் அது போன்ற எல்லா காரியங்கள். அது போன்ற காரியங்களிலிருந்து உங்களை வேறு பிரித்துக் கொண்டு, பிரிந்து வெளியே வந்து, தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கும் படிக்கு, நீங்கள் இதற்கு முன்பு சென்றிராத ஒரு அந்நிய தேசத்துக்குள்ளாக வரவேண்டும். 127. ஏனென்றால், ஆபிரகாமுக்கு ஒன்றுமே இருக்க வில்லை. அந்த ஐபிராத்து நதியை கடந்து அதற்கு அப்பால் உள்ள அந்த தேசத்திற்குள்ளாக யாருமே பிரயாணம் செய்ததில்லை. ஆனால், ஆபிரகாமோ விசுவாசத்தினாலே தன்னுடையதையெல்லாம் விட்டுவிட்டு தன்னைத்தானே வேறு பிரித்துக் கொண்டு அவன் முன்னேறி கடந்து சென்றான். 128. இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பரிசுத்த ஆவியினால் நம்மையெல்லாம் இந்த உலகத்தின் காரியங் களை விட்டு வேறு பிரித்து ஒரு புதிய ஜீவியத்திற்குள் நடக்க செய்கையில், நாமோ பரிகசிக்கப்பட்டு, கேலி செய்யப்பட்டு, பரிசுத்த உருளைகள் என்று அழைக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டோம். ஆனாலும், நம்மு டைய நங்கூரமோ உறுதியாக பற்றி பிடித்திருக்கிறது. 129. எபிரேயர் 11 சொல்லுகிறது, “அவர்கள் செம்மறி யாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத் தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள். ஏனென்றால், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்காக அவர்கள் காத்திருந்தார்கள். அவர்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அங்கே ஒரு தேசம் இருக்கிறது, ஒரு நகரம் இருக்கிறது அதை கட்டுகிறவர் தேவன் தாமே என்று அவர்களுக்குச் சொன்னது. ஆகவே, அவர்கள் தாங்கள் எங்கே போகிறோம் என்று அறியாமல் அதைத் தேடினார்கள்.” 130. அதே விதமாகத்தான் இன்றைக்கு இருக்கிற ஒவ்வொரு யாத்திரீகரிடத்திலும் காரியம் இருக்கிறது. அவன் தன் கைகளால் தொட்டுப் பார்க்க முடியாத ஏதோ ஒரு காரியத்திற்காக தேடிக் கொண்டிருக்கிறான். ஆனால், அது அவனுக்கு அருகே வருகிறதற்கான அத்தாட்சியை அவனால் பார்க்க முடிகிறது. எது என்னை அவ்வாறு செய்ய வைத்தது? எது இந்த முடமான பெண்ணை நடக்க வைத்தது? எது அந்த முடமான பெண்ணை நடக்க வைத்தது? எது அந்த மனிதனிடத்திலிருந்து அந்த தொல்லையை நீங்கச் செய்தது? எது அந்த பெண்மணி யிடத்திலிருந்து புற்றுநோயை விலக்கியது? அன்றொரு இரவிலே இங்கே ஒரு எண்பத்திரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு மனிதன் அவருடைய செவிட்டு காதுகளை எது திறக்கும் படி செய்தது? அது இயற்கைக்கு மேம்பட்ட தன்மைகள், அதுதான் அந்த நங்கூரம்... அந்த நகரத்தை கட்டி உண்டாக்குகிறவர் தேவன் தாமே. அதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் அது எங்கே இருக்கிறது என்று நம்மால் காண முடியாது. ஆனால், அக்கரையில் இருக்கிற ஏதோ ஒன்றின் மேல் நம்முடைய நங்கூரம் பாய்ச்சப்படுகிறது. அது உறுதியானதும், அசைக்க முடியாததுமாகிய திரைக்குள்ளாகச் செல்லுகிற நங்கூரமாய் இருக்கிறது. 131. ஆபிரகாம் அந்த தேசத்தை விட்டுப் புறப்பட்டு தன்னைத்தானே ஒரு அந்நியன் என்றும், ஒரு பரதேசி என்றும் அழைத்துக் கொண்டு சஞ்சாரமாய் புறப்பட்டுச் சென்றான். 132. மேலும், கவனியுங்கள், ஆபிரகாம் சாவுக்கேது வான மற்ற மனிதர்களைப் போல; ஒரு சாவாமையுள்ள மனிதன் அல்ல, தவறு செய்ய முடியாத ஒரு மனிதன் அல்ல, ஆனால், தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டி ருந்தவனாய் இருந்தான். ஆனாலும், அவன் எவ்வளவு தவறு செய்திருந்தாலும் அது காரியமில்லை. அவனுடைய நங்கூரம் இன்னுமாக பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஏனென்றால், அவன் அந்த வாக்குத்தத்தத்தை உடைய வனாய் இருந்தான். 133. ஆகையால், அவன் தன்னோடு கூட சாராளை அழைத்துக் கொண்டு சென்றான். லோத்தை அழைத்துக் கொண்டு சென்றான். அவன் தன் தகப்பனையும் அழைத்துக் கொண்டு சென்றான். ஆனால், அவர்கள் அவனோடு இருந்த வரைக்கும் தேவனால் அவனை ஆசீர் வதிக்க முடியவில்லை. கடைசியாக அந்த வயதானவர் மரித்துப் போனார். மேலும், அவர்கள் அந்த மனிதரை அடக்கம் பண்ணினார்கள். அவன் அதற்குப் பிறகு சற்று மேலாக கடந்து சென்றான். அதன் பிறகு லோத்தும் பின்வாங்கிப் போனான். மேலும், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு தெரியும். ஆகவே, அவன் அவனிடமிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டான். அதன் பிறகு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, “இப்பொழுது, ஆபிரகாமே, நீ உன்னைச் சுற்றிலும் இருக்கிற பூமியை நோக்கிப் பார். அவையெல்லாம் உன்னுடையது” என்றார். அவன் அந்த சரியான தீர்மானத்தை எடுத்த போது. அதுதான் காரியம். எல்லாவற்றிலுமிருந்து உன்னை வேறு பிரித்துக் கொள். 134. நான் இதை உங்களுக்குச் சொல்ல வேண்டிய வனாய் இருக்கிறேன். கவனியுங்கள், இப்பொழுது அது அதனுடைய தங்கி இருக்கும் இடத்தை கண்டு கொண்டது என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், நான் அதை ஒருபோதும் நினைக்கவில்லை, முன் தீர்மானிக்கவில்லை. 135. ஒருவேளை நம்மில் சிலர், இதனோடு ஒன்றிசைந்து இல்லாமல் இருக்க இது காரணமாக இருக்கலாம். வேறு பிரித்தலில் போக விடவேண்டிய சில காரியங்களை நாம் இன்னுமாக பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு சிறிய சந்தேகம், ஒரு சிறிய வியப்பு, ஒரு சிறிய குறை கூறுதல், ஒருவேளை அது சரியாக இருக்குமா? என்று ஆச்சரியப்படுவது. இதுவாயிருக்குமா? அதுவாயிருக்குமா? அது எப்படி அப்படி இருக்க முடியும்? இந்த காலை வேளையிலே அதையெல்லாம் அவிழ்த்து விடுங்கள். 136. எபிரேயர் 12:1 சொல்லுகிறது, “பாரமான யாவற் றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு,” அந்தப் “பாவம்” அது என்ன? அதுதான் “அவிசுவாசம்” அதுதான் எளிதாக நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிறது. மேலும், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக் கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித் திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். 137. ஆபிரகாமை இங்கே கவனியுங்கள். அதன் பிறகு அவன் தொல்லையில் அகப்பட்டுக் கொண்டான். லோத்து சோதோமுக்கும் கொமோராவுக்கும் போய் விட்டான். அந்த கதை உங்களுக்கு தெரியும். 138. நாம் வேகமாக செல்ல வேண்டும். நாம் ஆழமாக தியானிக்க முடியாது. 14- ஆம் வசனம். 139. மேலும் முதல் காரியம் உங்களுக்கு தெரியுமா? எல்லா புறஜாதி ராஜாக்களும் அங்கே கூடி வந்தார்கள். சோதோமுக்குள் வந்து யுத்தம் செய்து ஆபிரகாமின் சகோதரனின் மகனாகிய லோத்துவையும், அவனுடைய மனைவியையும், அவனுடைய பிள்ளைகளையும், மற்றவர் கள் எல்லாரையும் பிடித்துக்கொண்டு தேசத்தை விட்டுப் போய்விட்டார்கள். 140. அப்பொழுது சோதோமின் ராஜாக்களில் ஒருவன் அவன் தப்பி ஓடிக்கொண்டிருந்த பொழுது, அவன் அங்கிருந்த நிலக்கீல் கேணிகளுக்குள்ளாக ஓடி அங்கே விழுந்து மரித்தான். “நிலக்கீல்” என்பது அதைக் கொண்டு தான் அவர்கள் செங்கல் மற்றும் சாந்துகளை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு தங்கள் பட்டணங்களை கட்டினார்கள். 141. ஒரு சிறு மேலோட்டமான வாசிப்புக்காக இதை எடுத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டிற்கு போகும்பொழுது அதை வாசித்துக் கொள்ளலாம். ஆனால், நேரம் மிகவும் குறைவாய் இருக்கிறபடியால், நாம் வேகமாக செல்ல வேண்டும். மேலும், அந்த 14 வது வசனம்: தன் சகோதரன் சிறையாகக் கொண்டு போகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது,... 142. சகோதரனே, அதை நான் விரும்புகிறேன், “அவனுடைய சகோதரன்,” பாருங்கள்! அந்த லோத்து ஆபிரகாமுக்கு என்ன செய்தான் என்று. அப்படி இருந்தும், அவர்களை கட்டுகிறதான ஒரு அன்பின் கட்டு அங்கு இருந்தது. ஒருவேளை சகோதரன் பின்வாங்கி போனால். சற்று நேரத்திற்கு முன்பாக ஒரு வாலிபன் சொன்னது போல, இங்கே இருந்த ஒரு வாலிப ஊழியக்காரன், அவர் பின்வாங்கி வழி விலகிப் போய்விட்டார். ஆனாலும், எப்படியோ பரிசுத்த ஆவியானவர் அந்த நபருக்காக தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். அவர் தொல்லையில் அகப்பட்டபோது அவர் சரியாக அங்கே அவனுக்காக நின்றார். ...தன் சகோதரன் சிறையாகக் கொண்டு போகப் பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, 143. ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்கள் எல்லாரையும் அழைத்து, அவர்களுக்கு ஆயுதம் தரிப் பித்து, அதை சற்று யோசித்துப் பாருங்கள். “கல்தேயா” தேசத்தைச் சேர்ந்த “ஊர்” என்கிற பட்டணத்தை விட்டு ஒரு பரதேசியாக புறப்பட்ட ஒரு மனிதன். இப்பொழுது, அவனுக்குக் கீழாக கைபடிந்த முந்நூற்றுப் பதினெட்டு வேலைக்காரர்கள் இருந்தார்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கிறதில்லை என்று சொல்லுகிறீர்களா? அங்கே பாருங் கள், முந்நூற்றுப் பதினெட்டு வேலையாட்கள், அது என்ன? நீங்கள் கேட்கலாம், “நல்லது அது சரியா” என்று? 144. அப்படித்தான் வேதம் சொல்லுகிறது, அவனுக்கு போர் புரிவதற்கு ஒரு சேனைக்குத் தேவையான அளவுக்கு வேலையாட்கள் இருந்தார்கள். மேலும், அவன் தன் சத்துருக்களை மேற்கொண்டான்! கவனியுங்கள், “அவன் அவர்களை தொடர்ந்து சென்று, அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டு வந்தான்.” சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள் களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக் களையும் முறியடித்துத் திரும்பி வருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனா யிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து... அவனை ஆசீர்வதித்தான். 145. இந்த எல்லா புறஜாதி ராஜாக்களும் வந்து தன் சகோதரனை பிடித்துக் கொண்டு போன பிறகு, ஆபிரகாம் தன்னுடைய வேலைக்காரர்களை அழைத்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்று ராஜாக்களை அழித்து, அனைவரையும் திரும்ப அழைத்து வந்தான். 146. மேலும் கவனியுங்கள், சோதோமின் ராஜா வெளியே வருகிறான். கொமோராவின் ராஜா கொல்லப் பட்டு போனான். ஆனால், சோதோமின் ராஜா எதிர் கொண்டு வந்து, அவனை முன்னாக நிறுத்தி, “நீ எடுத்துக் கொண்ட, இந்த ஜனங்கள் எடுத்துக் கொண்ட பொருட் களை, அவைகளை நானே உனக்கு கொடுக்கிறேன்” என்றான். 147. அதற்குப் பிறகு, இந்த அதிகாரத்தின் இறுதியில் நாம் பார்க்கிறோம், ஆபிரகாம் சோதோமின் ராஜாவைப் பார்த்து “ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட் சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக் கொள்ளேன்” என்றான். 148. ஆனால் இங்கே நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்து சரியாக இங்கே இருக்கிறது. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனா யிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். 149. நான் அதை விரும்புகிறேன். இப்பொழுது கவனியுங்கள், ஆபிரகாமுக்குப் பிறகு, அந்த ஆவிக்குரிய காட்சி இங்கே இருக்கிறது. ஆபிரகாம்; அந்த வழி விலகிப் போன “தன்னுடைய சகோதரன்.” அது உண்மையான சபை பின்வாங்கிப் போனதற்கு ஒரு அடையாளமாய் இருக்கிறது, அல்லது அது தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட, தேவனு டைய வாக்குத்தத்தத்தைப் பெற்ற, தேவனுடைய உடன் படிக்கையை பெற்ற, மற்றும் அந்த உடன்படிக்கையில் விசுவாசம் கொண்ட ஒரு உண்மையான தேவனுடைய விசுவாசிக்கு அடையாளமாய் இருக்கிறது. 150. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். இங்கே நீங்கள் எண்ணி பார்த்தீர்கள் என்றால், அங்கே ஒரு பத்து அல்லது பதினைந்து ராஜாக்கள் யுத்தத்திற்கு சென்றார்கள். ஆனால், இவர்களுக்கோ எத்தனை வேலை ஆட்கள் இருந்தார்கள்? 151. ஆனால் ஆபிரகாம் தன்னிடம் இருந்தவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணினான், “அவர்கள் அவனுடைய சொந்த வீட்டில் பிறந்தவர்கள்.” ஓ, என்னே! அந்த உண்மையுள்ள, “அவனுடைய சொந்த வீட்டில் பிறந்தவர்கள்.” அவர்கள் அவனால் விருத்தசேதனம் பண்ணப்பட்ட அவனுடைய சொந்த வேலைக்காரர்கள். அவர்கள் அவன் பெற்றிருந்த அதே வாக்குத்தத்தத்திற் குள்ளாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள். மேலும் அவன் தன்னுடைய பின்வாங்கிப் போன சகோதரன் பின்னால் தன்னிடமிருந்த கைப்பிடி அளவு மனிதர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு பேர்களோடு கூட அந்த ராஜாக் களை பின்தொடர்ந்து சென்று அவர்களை முறியடித்து, அவர்களையெல்லாம் கொன்று போட்டு இழக்கப்பட்ட எல்லாவற்றையும் திருப்பி மீட்டுக் கொண்டு வந்தான். 152. கிறிஸ்து மற்றும் சபையின் பரிபூரணமான காட்சி! கிறிஸ்து பிறந்த அதே பரிசுத்த ஆவியின் வாசஸ்தலத்தில் பிறந்த உண்மையுள்ளவர்களை பரிசுத்த ஆவியானவர் வழிநடத்திச் சென்று, பின்வாங்கி போனவர்களை மீட்க அவர்களை தொடர்ந்து செல்கிறார். மேலும், அவர்களை மேற்கொள்கிற எல்லா பொல்லாங்கையும் கொல்லுகிறார். ஆமென். பாரமான யாவற்றையும் ஓரமாக தள்ளிவிட்டு, பாவத்தை மேற்கொள்கிறார். மக்கள் கொண்டிருக்கிற இச்சைகள் மற்றும் அவர்கள் செய்கிற காரியங்களை அவர் களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வியாதி களையும் மற்ற எல்லாவற்றையும் வெட்டி எறிந்து, அவர் களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அவர்களை மீண்டுமாக தேவனோடு முழுமையான ஐக்கியத்திற்குள் திரும்ப கொண்டு வருகிறார். 153. கவனியுங்கள். மேலும் அவன் திரும்பி வந்த போது, மெல்கிசேதேக்கு அவனை சந்தித்தார். இந்த மெல்கிசேதேக்கு யாராய் இருந்தார் என்று அல்லது யார் என்று நீங்கள் கவனிப்பீர்கள் என்றால், முதலாவது காரியம் இப்பொழுது மெல்கிசேதேக்கு அவனுக்கு எந்த பணத்தை யும் கொடுக்கவில்லை. மெல்கிசேதேக்கு அவனுக்கு அப்பமும், திராட்ச ரசமும் கொடுத்தான். மெல்கிசேதேக்கு உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகவும், எருச லேமின் ராஜாவாகவும் இருந்தான். 154. அப்பொழுது அது சாலேம் என்று அழைக்கப் பட்டது. இதோ குரூடென்ஸின் ஒத்தவாக்கிய வேதம் சொல்கிறது, நான் நினைக்கிறேன், அதன் பிறகு அதன் பேரில் கேள்வி கேட்கப்பட்டால் என்னால் அதை நிரூபிக்க முடியும். அதாவது எருசலேம் முதலாவது சாலேம் என்று அழைக்கப்பட்டது. “எருசலேம்” பாருங்கள், சாலேம், எரு - சலேம் பாருங்கள்? அது முதலாவது ஹி-ரு-ஆ-ம், ஹீரூ சலேம் என்று அழைக்கப்பட்டது. அதுதான் சரி. அதாவது அது புறஜாதிகளுடைய கட்டுப்பாட்டில் இருந்த பொழுது. ஓ, நீங்கள் அதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். எருசலேம் முதலாவது புறஜாதி களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 155. “மேலும், இந்த எருசலேமின் ராஜா அல்லது சாலேமின் ராஜா, அதனுடைய அர்த்தம் சமாதானத்தின் ராஜா, நீதியின் ராஜா என்பதாம். அவர் ஆபிரகாம் திரும்பி வரும்பொழுது அவனை சந்தித்து அவனுக்கு இராப் போஜனம் கொடுத்தார்.” “அப்பமும் திராட்சரசமும்.” ஆயிரக்கணக்கான வருடங்கள் அல்லது நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அப்பமும், திராட்சரசமும் சபையின் நியமங்களாய் இருந்தன. மேலும், அவர் எருச லேமின் ராஜாவாக இருந்தார். ஆமென். 156. இந்த மகத்தான மனிதன் யாராக இருந்தார்? நம்முடைய பொருளுக்கு இப்பொழுது திரும்பி வருவோம். 7 வது வசனம்... அல்லது 7 வது அதிகாரம். இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னத மான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; 157. அவன் ஒரு ராஜாவாக மாத்திரம் இருக்கவில்லை, ஒரு ஆசாரியனாகவும் இருந்தான். ...ராஜாக்களை முறியடித்து வந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்; 158. ஆசிர்வாதங்கள் உயர்ந்த ஒருவரிடத்தில் இருந்து மாத்திரமே வருகின்றன. கவனியுங்கள். “அவனுக்கு எல்-...” இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்; 159. இந்த மகத்தான மனிதன் யாராக இருந்தார்? அங்கே, அத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக? அவர் யாராக இருந்தார்? கவனியுங்கள். நாம் அவரைக் குறித்து இன்னும் சற்று கூடுதலாக வாசிப்போம். இவன் தகப்பனும் தாயும் இல்லாதவன்,... நாட்களின் துவக்கமும், ஜீவனின் முடிவும் முடிவுமுடையவனா யிராமல்; 160. அவனுக்குத் தகப்பன் இல்லை என்றால், அவனுக்குத் தாயும் இல்லை, அவனுக்கு நாட்களின் துவக்கமோ அல்லது ஜீவனின் முடிவோ இல்லை, மெல்கிசேதேக்கு இன்னுமாக இருக்கிறார். அது சரியா? “ஒழுங்கில் அமைக்கப்பட்ட... தகப்பனும் தாயும் இல்லாதவனாய்.” ...தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய்; என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 161. அவனால் முடியாது... அவனுக்கு துவக்கமும் இல்லை. அவனுக்கு முடிவும் இல்லை. அவனுக்கு தகப்பனும் இல்லை. அவனுக்கு தாயும் இல்லை. ஆனாலும், அவன் ஒரு மனிதனாய் இருந்தான், மேலும், அவன் சாலேமிலிருந்து வந்தான். சமாதானம், அவன் சமாதானத் தின் ராஜாவாக இருந்தான். அவன் நீதியின் ராஜாவாக இருந்தான். 162. அவர் ஒரு ராஜாவாக மாத்திரம் இருக்கவில்லை, ஆனால், ஒரு இளவரசனாகவும் இருந்தார். மேலும், அவர் சமாதான பிரபுவாய் இருக்கிறார். அவர் சாரோனின் ரோஜாவாய் இருக்கிறார். அவர் பள்ளத்தாக்கின் லீலியாய் இருக்கிறார். பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரம்; அல்பா, ஒமேகா; இருந்தவர், இருக்கிறவர், மற்றும் வருகிறவர்; தாவீதின் வேரும், சந்ததியுமாய் இருக்கிறவர். அவர் தாவீதுக்கு முன்பாக இருந்தார், தாவீதுக்குள் இருந் தார், மேலும், தாவீதுக்குப் பிறகும் இருந்தார். 163. இந்த ஆசாரியன் யாராக இருந்தார்? தம்முடைய அற்புதமான வல்லமையில் அவதாரம் எடுத்து வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அன்றி வேறெவரும் இல்லை. அவர் அதே நபராக இருந்தார். சற்று பிறகு, அவர் ஆபிரகாமை சந்தித்த பிறகு, ஒரு உடன்படிக்கையின் ஜனங்களாய் இருக்க, அவனுக்கு இராப்போஜனத்தை கொடுத்தார். அதன் பிறகு, இப்பொழுது, அதே உடன்படிக் கையின் மூலமாக நாம் அதை எடுத்துக் கொள்கிறோம் மேலும், அவர் ஒரு நிழலாட்டத்தில் இருந்தார். அந்த மெல்கிசேதேக்கு அவர் மாம்ச மனிதனாய் மாறின பொழுது, துண்டுகளாக்கப்படுவார். அப்பொழுது, இராப்போஜனம் கொடுக்கப்படும். அவருடைய சரீரத்தின் உடைந்ததுண்டுகளாக இன்றைக்கு நாம் எடுத்துக்கொள் கிறது போல. 164. அங்கே அந்த மெல்கிசேதேக்கு ஆபிரகாமை சந்தித்தான், மேலும், ஆபிரகாம் அவனுக்கு தசமபாகம் செலுத்தினான். ஆமென். ஆபிரகாம், பூமியின் மேலிருந்த மிகவும் ஒரு மகத்தான மனிதன், மெல்கிசேதேக்குக்கு, சமாதானத்தின் ராஜாவுக்கு, சாலேமின் ராஜாவுக்கு, நீதியின் ராஜாவுக்கு தசமபாகம் செலுத்தினான். 165. மேலும், அவர் ஒரு அதிபதியாய் இருந்தார். மேலும், அவர் - அவர் ஒரு பிரபுவாக இருந்தார். அவர் ஒரு ராஜாவாக இருந்தார். மேலும், அவர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரனாக இயேசு இருந்தது போல இருந்தார். 166. மேலும், ஆபிரகாம் சில வருடங்களுக்குப் பிறகு, அல்லது அதிலிருந்து சில நாட்களுக்குப் பிறகு, லோத்து பின்வாங்கிபோன பொழுது, மற்றும் சோதோம் எரிக்கப் பட்டபொழுது, அப்பொழுது, ஆபிரகாம் சாராளோடு தன்னந்தனியாக அந்த வறண்டு போன நிலங்களில் விட்டு விடப்பட்டான். அங்கே அவர்களுடைய கால்நடைகள் பட்டினியால் செத்துக்கொண்டிருந்தன. ஆகவே, அது பார்ப் பதற்கு தேவன் அவனை கைவிட்டு விட்டது போல இருந்தது. ஆனால், அவனுக்கோ விசுவாசிப்பதற்கு போது மான அளவுக்கு உறுதியான விசுவாசம் இருந்தது. 167. மேலும், ஒரு நாள் அவன் தன்னுடைய கூடார வாசலில் ஒரு பெரிய கருவாலி மரத்தின் கீழாக உட்கார்ந்து கொண்டிருந்தான். அது நன்றாக கருகிப்போன பின்பும் அது இன்னுமாக ஒரு ஞாபகார்த்தமாக இன்றைக்கும் இருக்கிறது. ஆனால், ஆபிரகாம் அந்த கூடார வாசலில் அங்கே உட்கார்ந்து கொண்டு, மெல்கிசேதேக்கு அவனிடம் நடந்து வருகிறதை கண்டான்; மூன்று மனிதர் நடந்து வந்தார்கள். 168. மேலும், ஆபிரகாம் இவ்வாறு சொல்லுகிறதை நான் சற்றே கற்பனை செய்து பார்க்கிறேன், “நான் அவரை இதற்கு முன்பு கண்டிருக்கிறேன்.” இதோ அவர் இங்கே வருகிறார். மேலும், அவன், “கர்த்தாவே சற்றே என் அண்டையில் வாரும், உமது கால்களை கழுவுவதற்கு நான் போய் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும்” என்றான். எப்படியோ அந்த உடன்படிக்கையின் மனிதன் தன்னுடைய இருதயத்திற்குள்ளாக, ஆழத்தில், அவர் ஒரு மனிதனைக் காட்டிலும் சற்றே மேலான ஒருவர் என்பதை அறிந்து கொண்டான். 169. அவர் சொன்னார், “நாங்கள் அந்நியர், நாங்கள் தூர தேசத்திலிருந்து வந்திருக்கிறோம்” என்று. அவர்கள் உடையெல்லாம் அழுக்காக இருந்தது. ஆம். அவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அவர்கள் அவ்வளவு தூரம் மகிமையிலிருந்து வந்திருந்தார்கள். ஆகவே, அவர்கள் அங்கே நடந்து வந்தார்கள். மேலும், அவர்கள் ஆபிரகா மிடம் சொன்னார்கள்... அவன் ஒரு சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து தர அவர்கள் தங்கள் கால்களை கழுவிக் கொண்டார்கள். ஆபிரகாம் அவர்களை நோக்கிப் பார்க்க ஆரம்பித்தான். 170. அவன் பின்பக்கமாக கூடாரத்திற்குள் நழுவிச் சென்று சாராளை பார்த்து, சாராளே ஒரு நிமிடம் நில் என்று சொல்லி, வேகமாக மந்தைக்குள் ஓடி அவனால் கண்டு பிடிக்க முடிந்த அளவுக்கு ஒரு கொழுத்த கன்றை கண்டு பிடித்து, அதை கொன்று அதை அவளிடத்தில் திரும்ப கொண்டு வந்து கொடுத்தான். 171. மேலும், அவன் கொஞ்சம் இறைச்சியும், அப்பமும், பாலும், வெண்ணையும் அந்த மனிதர்களுக்கு கொண்டு வந்து கொடுத்தான். ளஒலிநாடாவில் காலியிடம் - ஆசி.ன சாப்பிட்டனர். 172. இப்பொழுது, மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜா வாகவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாகவும், சமாதானத்தின் ராஜாவாகவும், அது வேறு யாருமல்ல அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முந்தைய பகுதி. மேலும், அவர் ஆபிரகாமை சந்தித்த பொழுது அவர் ஆபிரகா முக்கு இராப்போஜனம் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். ஆனால், இங்கே ஆபிரகாம் சோதோமுக்குப் போகிற தன்னுடைய பிரயாண வழியில் அவரை சந்தித்து அவருக்கு இறைச்சியும், அப்பமும் கொடுத்து போஷிக் கிறான். 173. ஓ, நீங்கள் மனிதர்களுக்கிடையே இருக்கிற அந்தத் தொடர்பை பார்க்கவில்லையா? அவர் வாக்குத்தத்தம் செய் தார். நம்முடைய அப்பமும், தண்ணீரும் நிச்சயமாய் இருக் கிறது. மேலும், நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக தேவன் அதைச் செய்வார். மேலும், அவர் செய்த ஒவ்வொரு தெய்வீக வாக்குத்தத்தத்தையும் அவர் நிறைவேற்ற கடமைப்பட்டவராய் இருக்கிறார். 174. மேலும், அந்த இரண்டு தூதர்களும் சோதோமை நோக்கிச் சென்ற பொழுது, ஆபிரகாம் இன்னுமாக அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் அந்த மனிதனோடு நின்று கொண்டு சுற்றும், முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவர் சொன்னார், “நான் இத்தனை நீதிமான்களை அங்கே காண்பேன் என்றால், அல்லது அத்தனை நீதிமான்களை காண்பேன் என்றால்,” இப்படியாக அவர்கள் பேரம் பேசிக் கொண்டே கடைசியாக இறங்கி பத்து வரைக்கும் வந்து விட்டார்கள். மேலும், அதன் பிறகு அவர்கள் பேசி முடித்த பிறகு அந்த தூதர், அல்லது அவன் அருகில் நின்று கொண்டிருந்த அந்த மனிதன் அந்த பலியினூடாக மேலேறி காணாமல் மறைந்து போய்விட்டார். மேலும், ஆபிரகாம் “நான் சர்வ வல்லமையுள்ள தேவனை முகமுக மாய் கண்டு அவரோடு பேசினேன்.” என்றான். முன்களத் தில் மெல்கிசேதேக்கு மற்றும் கிறிஸ்து. 175. எப்படியாக, நண்பர்களே, இந்த காலை வேளையில், நம் கண்களுக்கு முன்பாக இருக்கிற, இங்கே உள்ள இந்த திரையை நம்மால் எடுத்து போட முடிந்தால். மாம்சமானது நம்மை குருடாக்கி இருக்கிறது. திரையை இந்த விதமாக பின்னாக கிழித்து, என்னவாக இருக்கும் என்று வியப்படைய, காலத் திரைக்கு அப்பால் சற்றே நோக்கி பாருங்கள். நான் ஒரு சிறு பாடலை பாடுவதுண்டு: நான் மிகவும் தளர்ந்து சோர்ந்து விட்டேன், ஆகையால் நான் இயேசுவை காண வேண்டும். அந்த இனிமையானதுறைமுகத்தின் மணியோசைகளின் ரீங்காரத்தைக் கேட்க வேண்டும். ஆம். என்னால் மாத்திரம் அவரைப் பார்க்க முடிந்தால், காலம் எனும் திரைக்கு அப்பால் சற்றே என்னால் பார்க்க முடிந்தால், அது எனக்கு அதிகமான விசுவாசத்தைக் கொடுக்கும். இன்னும் எல்லாவற்றையும் அது எனக்குச் செய்யும். எல்லா பெலனையும் அது எனக்குக் கொடுக்கும். என்னால் மாத்திரம் அந்த காலம் எனும் திரைக்கு அப்பால் பார்க்க முடிந்தால்.” 176. அன்றைக்கு அங்கே காணப்பட்டது யார்? சரியாக அப்பொழுது “நாட்களின் துவக்கம் இல்லாதவராய், ஜீவனின் முடிவும் இல்லாதவராய்” வாக்குத்தத்தத்தை பெற்றிருந்த ஆபிரகாமுக்கு பூமியின் மேல் இந்த எருச லேமில் இராப்போஜனத்தை கொடுத்தது யார்? அந்த வாக்குத்தத்தம் இந்த காலை வேளையில் நமக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அது உங்கள் ஒவ்வொருவருக்கும் உடையதாய் இருக்கிறது. 177. இந்த மகத்தான பொருளின் பேரில் பேசுவதற்கு நமக்கு ஒருவேளை இன்னும் சற்று நேரம் கூடுதலாக இருந் திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நான் நினைக் கிறேன். ஒருவேளை வேறொரு நாளில், என்னுடைய இந்த பிரயாணங்கள் எல்லாம் முடிந்த பிறகு நாம் அதை பேசலாம். 178. பல்வேறு தேசங்களினூடாக இப்பொழுது நான் சென்று கொண்டிருக்கிற இந்த வேளையில், வெளிநாடு களுக்கும், இன்னும் சுற்றிலும் சுவிசேஷத்தை பிரசிங்கித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிற வேளையில், நான் இந்த காரியத்தை உங்கள் கவனத்திற்கு விட்டுச் செல்கிறேன். எனக்கு அருமையான பிள்ளைகளே, என் சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத் தின் உடன் வேலையாட்களே, சோர்ந்து போகாதீர்கள். இந்த காலை வேளையிலே புதிய தைரியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை உயர்த்துங்கள். உங்கள் தளர்ந்த முழங்கால்களையும் ஒரு விசை தொங்கிப் போன உங்கள் கைகளையும் உயர்த்துங்கள். நமக்கு இந்த வாக்குத் தத்தங்களை தந்தவராகிய நம்முடைய விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் எனக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாட்டின் மூலமாக, நான் உங்களுக்கு பிரசங்கிக்க முயற்சிக்கும் இந்த காரியத்தை, நான் அறியாமை உள்ளவனும், கல்வியறி வில்லாதவனும், படிப்பறிவற்றவனாகவும் இருந்தாலும் கூட, சர்வவல்ல தேவன் அதை இவ்வுலகிற்கு முன்பாக வைத்துள்ளார், ஏனென்றால் அது தோல்வியடையாது. 179. கடந்த வாரத்திலும், இந்த வாரத்திலும் முடமான வர்களும், வேதனைப்பட்டவர்களும் இந்த காலை வேளை யிலே சுகமானவர்களாகவும், ஆரோக்கியமானவர்களா கவும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். அதேபோல சில இரவுகளுக்கு முன்பாக செவிடர்களாய் இங்கே நின்று கொண்டிருந்தவர்கள் இங்கே இப்பொழுது மற்றவர்களைப் போல சர்வ சாதாரணமாக கேட்கக் கூடியவர்களாய் நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன? அது தேவன் ஆபிரகா முக்கும், அவருடைய சந்ததிக்கும் செய்ததான நிபந்தனை யற்ற உடன்படிக்கையாய் இருக்கிறது. அவர் அப்படி செய்வதாக வாக்குத்தத்தம் செய்தார், ஆகையால், இந்த காலை வேளையிலே நாம் நம்முடைய முழு இருதயத் தோடும் அதை விசுவாசிப்போம். 180. மக்களாகிய நம்மில் சிலர் வயதானவர்களும், சிலர் முடி நரைத்துக் கொண்டும் அப்படியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். மறுபடியும் ஒரு விசை சந்திப்பதற்கு முன்பாக நம்மில் சிலர் ஒரு வேளை அந்த திரைக்கு அப்பால் கடந்து சென்றுவிடலாம். ஆனால், நீங்கள் என்ன செய்தாலும், உங்கள் ஜீவியம் உங்களுக்கு என்ன கொண்டு வந்தாலும், அது உங்களுக்கு வியாதியை கொண்டு வந்தாலும், அது ஒரு வேளை இந்த உலகத்தில் இருக்கிற வேறு எதைக் கொண்டு வந்தாலும், உங்களுடைய நங்கூரத்தை திரைக்குள்ளாக வைத்திருங்கள். இல்லாதவை களை இருக்கிறவைகளைப் போல அழைத்துக் கொண்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய அக்கரையில் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருங்கள். 181. ஒரு மனிதன் பின்பற்றும்படியாக அங்கே மூன்று காரியங்கள் இருக்கின்றன. முதலாவது, மனிதத்துவம்; இரண்டாவது, தெய்வீக வெளிப்பாடு; மூன்றாவது, ஒரு தரிசனமாய் இருக்கிறது. அதுதான் “கர்த்தர் உரைக்கிற தாவது” என்பதாக இருக்கிறது. அநேக சமயங்களில் நாம் இங்கே கீழாக முதல் காரியத்தில் இருக்கிறோம். அடுத்த கட்டத்திற்கு நாம் ஏறுவதே இல்லை. நீங்கள் கீழே இல்லை என்பதாக இருந்தால், இப்பொழுது உங்கள் நம்பிக்கைகளை இங்கே மேலே உள்ள “கர்த்தர் உரைக்கிறதாவது” என்ற இந்த திரைக்குள்ளாக பாய்ச்சுங்கள். நீங்கள் ஒருவேளை தரிசனத்தை காண முடியாமல் இருந்தாலும், ஒருவேளை உங்களுக்கு வெளிப்பாடு வராமல் இருந்தாலும், ஒரு வேளை உங்களுக்கு ஜெபிக்கப்படும் பொழுது நீங்கள் “நான் அதை விசுவாசிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றும் சொல்லலாம். ஆனாலும், அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. உங்கள் நங்கூரத்தை அங்கே ஆழமாக செலுத்தி, இருக்கிற வைகளாக அழையுங்கள், எப்படியாயினும். ஆபிரகாமால் அதை பார்க்க முடியவில்லை. அவன், “அது எப்படி ஆகும்?” என்று சொன்னான். 182. மரியாளால் நம்ப முடியாமல் இருந்தது. “ஒரு புருஷனையும் அறியாமல் இருந்த அவளால் எப்படி ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ள முடியும்?” 183. அவர் சொன்னார், “ஆனால் பரிசுத்த ஆவி உன் மேல் நிழலிடுவார், அவர் அதை நிறைவேறச் செய்வார்” என்று. 184. அவள் சொன்னாள், “இதோ நான் ஆண்டவரு டைய அடிமை, அப்படியே ஆகக் கடவது” அது எப்படி செய்யப்பட போகிறது? அது அவளுக்கு தெரியாது. ஆனால், அவள் தன்னுடைய நங்கூரத்தை திரைக்கு அப்பால் பாய்ச்சினாள். அவள் ஒரு ஜீவனையோ, வேறு எந்த ஒரு காரியத்தையோ உணர்வதற்கு முன்பாகவே, தான் ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ளப் போவதாக சாட்சி பகர்ந்து கொண்டு சென்று கொண்டிருந்தாள். அவள் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தாள். 185. ஆபிரகாம், அவனுக்கு எழுபத்தைந்து வயதாகும் பொழுது, தேவன் அவனுக்கு அந்த வாக்குத்தத்தத்தை கொடுத்தார். மேலும், சாராளுக்கு அப்பொழுது அறுபத் தைந்து வயது, அவளுக்கும் அந்த வாக்குத்தத்தத்தை கொடுத்தார். ஆனால், அது நிறைவேறுவதற்கு முன்பாக இருபத்தைந்து வருடங்கள் கடந்து சென்று விட்டன. ஆனால், ஆபிரகாமோ அவிசுவாசத்தினாலே தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து தடுமாறாமல் தேவனுக்கு மகிமை செலுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். மேலும் அந்த அறிகுறிகளையும், காரியங்களையும் அவைகள் அங்கே இல்லாதிருந்தும் கூட, இருக்கிறவைகளாக அழைத்துக் கொண்டு இருந்தான். தேவன் சொன்னவைகள் மாத்திரமே சத்தியமாயிருக்கிறது என்பதை அவன் அறிக்கை செய்து கொண்டிருந்தான். ஏனென்றால், அவன் அந்த வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தான். 186. தேவன் இரக்கமாயிருப்பாராக. ஓ, என்னே! இந்த காலை வேளையிலே உங்களுடைய விசுவாசம் நிலையாக இருக்கிறதா? தொல்லைப்படுத்தும் காற்றுகள் வீசும் பொழுதும், இரவானது இருளாய் இருக்கும் பொழுதும், காற்றும் மற்றும் மின்னலும் அடித்துக் கொண்டிருக்கும் பொழுதும், உங்களுடைய நங்கூரம் உறுதியாக பிடித்திருக் கிறதா? இந்த காலை வேளையிலே நீதியோடு உள்ள இயேசுவின் இரத்தத்துக்கு குறைவான எந்த ஒன்றின் மேலும் உங்கள் நம்பிக்கையை கட்டாதிருங்கள். அது கடினம் என்று எனக்குத் தெரியும். அது பார்ப்பதற்கு கடினமாக தான் தோன்றுகிறது. ஆனால், ஒரு விசை அதை எடுத்துக்கொண்டு தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக்கொண்டு விசுவாசத்தோடு முன்னேறிச் செல்லும் பொழுது அது எப்பேர்ப்பட்ட ஒரு ஆசீர்வாதமான நம்பிக்கையாய் இருக்கிறது என்று பாருங்கள். 187. இந்த மகத்தான விசுவாசப் போராட்டத்தை நான் போராட முயற்சித்த பொழுது, நான் மிகக் கொடூரமான பல தடைகளை கடந்து வந்திருக்கிறேன். மிகவும் கரடு, முரடான பலவிதமான பாதைகளில் நான் இருந்திருக் கிறேன். அது நான் அதைப் பெற்றிருக்கிறேன் என்பதை எனக்கு காட்டுகிறது. ஆனாலும், அது மிகுந்த ஆசீர் வாதமான ஒரு காரியமாக இருந்திருக்கிறது. இந்த உலகத் தில் உள்ள எந்த ஒன்றுக்காகவும் நான் அதை விற்றுப் போட மாட்டேன். 188. மேலும், இதோ இருக்கிறது என்னுடைய மகத்தான வெற்றிகள், நான் பெற்றிருக்கின்ற மகத்தான சந்தோஷங்கள் என்னவென்றால், நான் ஒரு காரியத்திற்கு எதிராக வரும் பொழுது, எனக்கு அந்த காரியத்திற்கு மேலாகவோ, அதற்குப் பக்கத்திலோ, அதற்குக் கீழாகவோ எதையுமே காண முடியாது. ஆனாலும், நான் அங்கே சென்றடையும் பொழுது தேவன் எனக்கு ஒரு வழியை உண்டு பண்ணுவார் என்று, இவ்வாறு விசுவாசித்துக் கொண்டே நான் அதை நோக்கி தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பேன். இந்த வருடம் இதுவரைக்கும் கடந்து வந்திருப்பது அது நான் அல்ல, ஆனால், இதுவரைக்கும் நான் கடந்து வந்த இந்த தூரம் நான் அவர் மேல் வைத்த விசுவாசம் தான். அவரோ ஒருபோதும் என்னை கைவிடவே இல்லை. என்னுடைய இருதயத்துக்கு தெய்வபயத்தை கற்றுக் கொடுத்தது கிருபையே. நான் முதல் அதை விசுவாசித்த பொழுதே, அந்தகிருபை எவ்வளவு விலையேறப்பெற்றதாக காணப்பட்டது! மேலும், அனேக ஆபத்துகள், பிரயாசங்கள், மற்றும் கண்ணிகள் வழியாகவும், நான் ஏற்கனவே கடந்து வந்திருந்தும், என்னை பாதுகாப்பாக இதுவரை நடத்தி வந்தது அந்த கிருபையே, அந்த கிருபையே தொடர்ந்து என்னை நடத்திச் செல்லப் போகிறது. மேலும், சூரியனைப் போல எரிந்து பிரகாசித்துக்கொண்டு, பத்தாயிரம் வருடங்கள் நாம் அங்கே இருந்தாலும், நாம் அவரை அவருடைய துதியை பாட ஆரம்பிக்கும் பொழுது, நமக்கு நாட்கள் குறைவாக இருக்கப் போவதே இல்லை. 189. வாக்குத்தத்தத்தின் சுதந்திரவாளிகளாயிருந்த ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு அவர்களோடு கூட உண்மையில் நாம் அங்கே இருக்கும் பொழுது, அவர்கள் நமக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் விழுந்து போக வேண்டும் என்பதற்காக அல்ல ஏனென் றால், நம்மையல்லாமல் அவர்கள் பூரணராக முடியாது. மேலும், எப்படியாக அவர்கள் இந்த காலை வேளையிலே நம் பேரில் சார்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஆகவே, நாம் விழுந்து போக மாட்டோம். 190. ஒரு வேளை நீ ஒரு பாவியாய் இருந்தால், நீ இந்த பீடத்தண்டை வரவேண்டியதில்லை, வழக்கமாக அப்படித்தான் செய்வார்கள். ஆனால், உனக்கு வர மனமில்லை என்றால், நீ இங்கு வர இடமில்லை என்றால், கர்த்தரிடத்தில் சொல், “நான் என்னுடைய எல்லா உலக காரியங்களையும் இப்பொழுதே அப்பால் தள்ளி விடு கிறேன். நான் என்னை வெறுமையாகவும், ஒளிவுமறைவு அற்றவனாகவும், நான் இருக்கிற வண்ணமாகவே அப் படியே உமக்கு முன்பாக சமர்ப்பிக்கிறேன். மேலும் நான் வெட்கமும், அவமானமும் உள்ளவனாய் இருக்கிறேன். ஆனால், நான் என் நங்கூரத்தை உம் மேல் பாய்ச்சுகிறேன். மேலும் நான் உம்மில் விசுவாசம் கொண்டுள்ளேன். என்னால் எதுவும் செய்ய இயலாது, ஆனால் எல்லாம் நீர் எனக்காக செய்ததே.” 191. நீங்கள் வியாதியாயிருந்தால், நீங்கள் சுகமடை வதற்கு ஒரு போதும் ஒரு வழியும் இல்லை என்றும், உங்களுக்கு ஒன்றுமே செய்யப்பட முடியாது என்றும் மருத்துவர் சொன்னால், நீங்கள் வெறுமனே இந்த கூடா... நோக்கிப் பாருங்கள். இன்று காலையில் சுகமாக்கப்பட்ட இந்த சிறு கூட்ட மக்கள் அவர்களை நோக்கிப் பாருங்கள். கடந்த சில வாரங்களில் உலகம் முழுவதிலும் சுகமாக்கப் பட்ட ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களில் இவர்கள் ஒரு கைப்பிடி அளவு தான் இருக்கிறார்கள். அது ஒரு புள்ளி அளவு கூட இல்லை என்று சொல்லலாம். 192. மகத்தான முகாம் கூட்டங்கள்! சுகமளிக்கும் முகாம் கூட்டங்களைக் கொண்டு உலகம் பெரிய முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது. விசுவாசமுள்ள மனிதர்கள் வெளியே புறப்பட்டுச் சென்று தேவனை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொள்ளத் துணிந்து விட்டார்கள். புறஜாதிகளின் காலம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு அடை யாளமாய் இருக்கிறது. அதை நோக்கிப் பாருங்கள். நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம். 193. அன்றைக்கு அவர்கள் எலியாவை அடையாளம் கண்டு கொள்ள, நீண்ட காலம் காத்திருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், சீஷர்கள் “எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே?” என்று கூட கேட்டார்கள். அவர் சொன்னார், “அவன் ஏற்கனவே வந்தாயிற்று, நீங்கள் அவனை அறியவில்லை” என்று. அவர்கள் கேட்டார்கள், “அவர் யார்?” என்று. அவர் சொன்னார், “யோவான் ஸ்நானகன்” என்று. “நல்லது, நிச்சயமாக அவன்தான் அது” என்று அவர் கள் சொன்னார்கள். 194. இயேசு வந்தார், ஆனால், அவர்கள் அவரை அறியவில்லை. ரோமர்கள் அவரை சிலுவையில் அறைந்த பிறகு அதன் பிறகு எதையுமே செய்வதற்கு மிகவும் தாமதமாகி விட்ட பிறகு, “மெய்யாகவே இவர் தேவ னுடைய குமாரன்” என்று ஒருவன் சொன்னான். அவர் குற்றவாளியாக இருந்தபோதிலும், அவர் முகத்தில் துப்பப் பட்டிருந்தபோதிலும், அவர் பரிகாசம் பண்ணப்பட்டிருந்த போதிலும், இன்னுமாக தேவன் அவரை அற்புதங்களி னாலும், அடையாளங்களினாலும் அவரை ரூபகாரப் படுத்தியிருந்தார். 195. இன்று, நாம் நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம். இது புறஜாதிகளின் யுகம் முடிவடையும் நேரமாக இருக் கிறது. நாம் முடிவடைந்து கொண்டிருக்கிறோம். தேசங்கள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழுகிறாள், வேதம் முன்னுரைத்த அடையாளங்கள் நிறைவேறுகின்றன; புறஜாதி நாட்கள் எண்ணப்பட்டு விட்டன, துன்பங்கள் பெருகுகின்றன; ஓ, சிதறுண்டவர்களே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள். மீட்பின் நாள் நெருங்கி விட்டது, மனிதருடைய இருதயம் பயத்தினால் கரைந்து போகிறது; ஆவியினால் நிரப்பப்பட்டிருங்கள், உங்கள் தீவட்டிகளின் திரிகள் கத்தரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படட்டும், உங்கள் மீட்பு சமீபமாகிவிட்டது! மேல்நோக்கிப் பாருங்கள். 196. எங்கள் பிதாவே, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக் கைக்காக நாங்கள் இந்த காலை வேளையில் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஓ, ஒரு மகிமையான நாளில் நீர் மறுபடி யுமாக இந்த பூமியின் மேல் நிற்கும் பொழுது இவ்வாறு சொல்லப்படும், சங்கீதங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்க வில்லையா? உங்கள் மீட்பு சமீபமாய் இருக்கிறது, என்று. நீர் முதல் முறையாக இங்கே இருந்த பொழுது, நீர் சொன்னீர், “இந்த குறிப்பிட்ட காரியங்களை குறித்து தாவீது சொன்னதாக உங்கள் பாடல்களில் எழுதி இருக்க வில்லையா?” என்று. 197. மேலும், “ஆகாயத்திலே ஒரு சந்திப்பு உண்டாகி இருக்கும்,” என்கிற அந்தப் பாடலை நாங்கள் நினைத்துப் பார்க்கும் பொழுது, ஏனென்றால், எல்லா தீர்க்கதரிசிகளும், மற்றும் மீட்கப்பட்டவர்களும், மற்றும் சிறிய தாவீதும், மற்றும் மோசேயும், மற்றும் சகல கோத்திர பிதாக்களும் அங்கே பிரசன்னமாய் இருப்பர். அப்பொழுது நாங்கள், “நாங்கள் இதை காண்போம் என்று அந்த பாடல்களில் எழுதப்பட்டிருக்கவில்லையா” என்று சொல்லுவோம். மேலும், அப்பொழுது காலங்களின் ஊடாக மீட்கப் பட்டவர்கள் எல்லோரும் ஒன்று கூடி களிகூறுவர். 198. பிதாவே, இந்தக் காலை வேளையிலே வழி தவறி போன ஒவ்வொரு மனிதனையும், ஸ்திரீயையும், பையனையும், பெண்ணையும் நீர் மன்னிப்பீராக. விசுவாசத் தினால் அவர்கள் உம்மை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியினால் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள்ளாக முத்திரை போடப்படுகிற இந்த நாள் தாமே அவர்கள் ஜீவியத்தில் ஒரு புதிய நாளாக இருக்கட்டும். 199. பிதாவே, அவசரமாக பேசப்பட்ட இந்த சில வார்த்தைகளை எடுத்து, மக்களுக்கு அது எப்படி தேவைப் படுகிறதோ அந்த விதத்தில், அவர்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதியும்படி செய்யும். 200. இப்பொழுது, இன்னும் சில நிமிடங்களுக்குள்ளாக சுகம் பெற்றுக்கொள்ளும் படியாக மக்கள் இங்கே கடந்து வரப்போகிறார்கள். கர்த்தாவே, இங்கே இருக்கப் போகிற வர்கள் குருடர்களாகவும், வேதனையுற்றவர்களாகவும், முடமானவர்களாகவும் மற்றும் வியாதியுற்றவர்களாகவும், மேலும் எல்லாவிதமான வியாதிகளையும் தங்கள் மேல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பிதாவே, பிசாசு தான் அந்த பொல்லாப்பை செய்திருக்கிறான். கர்த்தாவே, தாங்கள் சுகமாக்கப்படுவோம் என்று விசுவாசியாதிருந்தால் பரிதாப மான அந்த மக்கள் அவர்கள் இங்கே வரமாட்டார்கள். 201. நீர் “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், எங்கள் சாட்சியினாலும் மேற்கொள்வோம்” என்று சொன்னீர். மேலும், இங்கே இந்த மேடையின் மேலே அந்த கயிறுகள் மற்றும் ஊன்றுகோல்கள், குவித்து வைக்கப்பட்டிருக் கின்றன. மேலும், சக்கர நாற்காலிகளும், மற்றும் ஓ, கட்டில்கள், மற்றும் படுக்கைகள், குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும், கர்த்தாவே, சாத்தான் தங்கள் மேல் போட்டிருந்த எல்லாவிதமான வியாதிகள், வேதனைகள் எல்லாவற்றி லிருந்தும் விடுதலையாகி மனிதர்களும், ஸ்திரீகளும் இங்கிருந்து நடந்து சென்றனர். இது அப்படிப்பட்ட ஒரு இடமாய் இருந்த காரணத்தினால் அல்ல. ஆனால், அவர் களுடைய விசுவாசம் உம்முடைய தேவையை சரியாக இங்கே சந்தித்தது, அந்த காரணத்தினால் தான். 202. தேவனே, இந்த காலை வேளையில், இங்குள்ள ஒவ்வொரு வியாதியாயுள்ள நபரும், அங்கே இருந்த அந்த மகத்தான மெல்கிசேதேக்கு, நாட்களின் துவக்கம் இல்லாத, தாயும் தகப்பனும் இல்லாத, ஜீவனின் முடிவும் இல்லாத அவர், இன்றும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள இங்குள்ள ஒவ்வொருவரின் விசுவாச மும் போதுமானதாய் இருக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஒருநாள் அவர் மானிட உருவை அவதரித்தார், மாம்சமாகி இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார்; மரித்தார், பின்னர் மீண்டும் அதற்குள்ளாக சென்று விட்டார். அவர் இன்னமும் அதே சமாதான பிரபுவாக இருக்கிறார்; நீதியின் இராஜாவாக இருக்கிறார்; எங்களுக்கு மகத்தான நித்திய காரியங்களை வாக்குத்தத்தம் செய்து கொண்டிருக்கிறார். தேவனால் இது ஆபிரகாமுக்கு ஆணையிடப்பட்டது, அதாவது ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென் றைக்கும் அவர் அந்த உடன்படிக்கையை காத்துக் கொள்வார் என்பதே. இன்றைக்கு நாங்கள் இந்த மேடையை (platform) நோக்கி தோல்வியடையாத விசு வாசத்தைக் கொண்டு முன்னேறி செல்ல உதவி செய்யும்.. 203. கர்த்தாவே, இங்கே இருக்கிறவர்களில் சிலர் கெட்ட பழக்கங்களினாலும், மாம்சத்தின் பழைய அவலட் சணமான சுபாவங்களாலும் கட்டப்பட்டிருக்கிறார்கள். தேவனே, வேதம் சொல்லுகிற வண்ணமாக, “பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத் தையும் உதறித் தள்ளிவிட்டு” என்பது போல, தேவனே, இந்த காலை வேளையிலே அவர்கள் அதை உதறித் தள்ளி விட்டு, எங்களை எல்லா அநீதியினின்றும் சுத்திகரிக்கக் கூடிய இயேசுவை நோக்கிப் பார்ப்பார்களாக! பிதாவே, இதை அருளும். 204. மேலும், இன்று நாங்கள் இங்கிருந்து புறப்படும் பொழுது, நாங்கள் எங்கள் இருதயம் முழுவதும் அன்போடும், களிகூறுதலோடும் புறப்பட்டுச் செல்வோமாக. இந்த சிறு சபையை ஆசீர்வதியும். கர்த்தாவே, எங்கள் அருமையான சகோதரன் நெவில் இங்கே இந்த சிறிய சபைக்கு போதகராக இருந்து கொண்டு, இரவும், பகலும் உழைத்து, பிரயாசப்பட்டு இந்த இடத்தை ஜனங்கள் வந்து ஆராதிக்கத்தக்க ஒரு இடமாகவும், இயேசு கிறிஸ்துவை தம்முடைய அன்பிலும், வல்லமையிலும் ரூபகாரப்படுத்தப் பட்டவராய் ஜனங்கள் காணத்தக்கதாகவும் அவர் செய்து கொண்டிருக்கிறார், அவரை ஆசீர்வதியும். 205. கர்த்தாவே, இன்று இரவு ஆராதனையை ஆசீர்வதியும். எங்களுக்கு மகத்தான ஆசீர்வாதங்களை தந்தருளும். மேலும், பிதாவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நீர் மகிமையை எடுத்துக் கொள்ளும்படியாக உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். 206. மேலும், ஒரு நாளில் எங்கள் ஜீவிய காலமெல் லாம் முடிந்த பிறகு, கடைசி பிரசங்கமும் பிரசங்கிக்கப் பட்டு, வேதாகமும் மூடப்பட்டு, ஒலிநாடாக்கள் ஒலிக்கப் பட்டு, ஆயுதங்கள் குவிக்கப்பட்டு, யுத்தத்தின் புகைகள் அணைந்து கொண்டிருக்க, சூரியனும் அஸ்தமித்து விடும். அப்பொழுது, பிதாவே, எங்களை உம்முடைய ராஜ்யத்திற் குள்ளாக எடுத்துக் கொள்ளும். நாங்கள் பழைய காலத்து மாதிரியிலான யுத்தத்தின் வீரத்தழும்புகளை பெற்ற போர் வீரர்களைப் போல உம்மிடத்தில் வருவோமாக. அப் பொழுது, இனி ஒருபோதும் வியாதியுராத, இனி ஒரு போதும் இருதய வலியோ, துயரமோ இல்லாத ஒரு புதிய சரீரத்தை நாங்கள் பெற்றுக் கொள்ளுவோம். கர்த்தாவே, இதை எங்களுக்கு அளியும். 207. ஆனால், இப்படிப்பட்ட காரியங்களில் நாங்கள் உண்மையுள்ளவர்களாய் இருப்போமாக. பூமியில் இப் பொழுது நாங்கள் இருக்கையிலே, இல்லாதவைகளை, தேவனுடைய வார்த்தைக்கு மாறாக இருப்பது போல இருந் தாலும், அவைகளை இருப்பதைப் போல அழைக்கவும், விசுவாசிக்கவும் செய்வோமாக. இதை நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 208. இங்கு இருக்கிற யாராவது, நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளப் போகிறேன், நான் இதற்கு முன்பு அதை செய்ததில்லை, நான் என் கையை உயர்த்த விரும்புகிறேன் என்று சொல்ல வேண்டுமென்று உங்கள் மனதில் தோன்றினால், “நான் என் கைகளை உயர்த்துவதன் மூலம் நான் அவரை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சொல்லுங்கள். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது... சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. “நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.” சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. மேலும், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது சரி. 209. அவருக்கு அது கேட்காது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவருக்கு உங்கள் இருதயத்தை தெரியும். அவர்தான் அப்படி செய்யும்படி உங்களிடம் சொன்னவர். வேறு சிலர் சொல்கிறார்கள், “நான்- நான் இப்பொழுது விசுவாசிக்க விரும்புகிறேன்” என்று. “நான்- நான் இப்பொழுது கர்த்தாவே, நான் இப்பொழுதே உம்மை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று சொல்கிறார்கள். எனக்கு என்னுடைய நங்கூரம் திரைக்கு அப்பால் உறுதியாக பாய்ச்சப்பட வேண்டும் அப்பொழுது, அது ஒருபோதும் அசையாமல் இருக்கும். நான் உம்மை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். வேறு யாராகிலும் இங்கே இருக்கிறீர்களா? உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. [ஒலிநாடாவில் காலியிடம்-ஆசிரியர்]... அதன் பிறகு என்ன? அந்த மகத்தான புத்தகம் திறக்கப்பட்ட பிறகு, அதன் பிறகு என்ன? இன்றைக்கு இந்த செய்தியை புறக்கணிக்கிறவர்கள், அவர்கள் ஏன் அதை புறக்கணித்தார்கள் என்று காரணம் சொல்லும் படியாக கேட்கப்படுவார்கள். அப்பொழுது என்ன? 210. இப்பொழுது, கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள்... நாம் ஜெபிக்க போகிறோம். இங்கே இருக்கிற எத்தனை பேர் வியாதியோடிருந்து ஜெபித்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் கரங்களை காணட்டும். இந்த கட்டிடத்தில் வேறு எங்கேயாவது, வியாதியாய் இருக்கிறவர்கள்?